கந்த சஷ்டி சர்ச்சையில் ரஜினிகாந்த் கருத்து: நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்குப் பாராட்டு

ரஜினியுடன் கரம் கோர்க்கின்றனரா ஆளுங்கட்சி அமைச்சர்கள்? - அதிமுக சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images

கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டதைக் கடுமையாகக் கண்டித்துள்ள ரஜினிகாந்த், இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற யு டியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. புராணங்களில் ஆபாசங்கள் இருப்பதாக அந்த யூடியூப் சேனல் விமர்சித்தனர். அந்த யூடியூப் சேனலின் விமர்சனத்தில் ஆபாசம் இருப்பதாக விமர்சகர்கள் கூறினர். கந்த சஷ்டி கவசம் குறித்த விமர்சனமும் அருவருப்பாக இருப்பதாக பலர் தெரிவித்தனர். கறுப்பர்கூட்டம் வீடியோக்கள் அழிப்பு

இந்நிலையில் கறுப்பர் கூட்டம் என்ற யு டியூப் சானலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். அந்த யு டியூப் சேனலில் இருந்த வீடியோக்கள் நேற்று அழிக்கப்பட்டன.

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், "கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்.. ஒழியனும். எல்லா மதமும் சம்மதமே!! கந்தனுக்கு அரோகரா!" என்று கூறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் கருத்தை அடுத்து, #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹாஷ்டாக் டிரெண்ட் செய்யப்பட்டுவருகிறது.

ரஜினியை விமர்சிப்பவர்கள், பிற்படுத்தப்பட்டோர் இட ஒட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பதை நினைவூட்டி, அதைப் பற்றி அவர் ஏதும் பேசவில்லையே என்று கேட்டு வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :