`இந்தியாவில் 270 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்`

பட மூலாதாரம், Getty Images
ஐநா வளர்ச்சி திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் வறுமை மற்றும் மனித வள மேம்பாட்டு முனைப்பு இணைந்து சர்வதேச அளவில் வெளியிட்டுள்ள கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, , பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை குறியீட்டு அறிக்கைபடி இந்தியாவில் சுமார் 270 மில்லியன் மக்கள் 2005-6 ஆண்டுகாலகட்டம் முதல் 2015-16 வரையிலான காலகட்டம் வரை பல்வேறு அம்சங்கள் தொடர்பான வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 10 முக்கிய தகவல்கள்.
1.உலகளவில் 107 வளரும் நாடுகளில் 1.3 பில்லியன் மக்கள் அதாவது 22 சதவீதம் பேர் பல்பரிமாண வறுமையில் வாழ்கின்றனர்.
2.பெரியவர்களை காட்டிலும் குழந்தைகள் அதிக வறுமையில் வாழ்கின்றனர். வறுமையில் வாழும் பாதிப்பேர் குழந்தைகள் அதாவது 18 வயதுக்குட்பட்டவர்கள். மூன்றில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது. பெரியவர்களை பொறுத்தவரை இது ஆறில் ஒன்றாக உள்ளது.
3.சுமார் 84 சதவீத ஏழை மக்கள் ஆப்ரிக்க துணை கண்டம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
4.கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை நிலையில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் வசிக்கின்றனர்.
5.இந்தவகை வறுமையில் வாழும் 107 பேர் 60 அல்லது அதற்கும் மேல் வயதானவர்கள்.
6.இந்தியாவை பொறுத்தவரை (2005/2006 - 2015/2016) ஆண்டில் தேசிய அளவில் பல்வேறு அம்சங்கள் அடங்கிய வறுமை நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் பெரிதாக குறைந்துள்ளது.சுமார் 270 மில்லியன் பேர் இதில் இருந்து மீண்டுள்ளனர்.
7.தெற்காசியாவில் சுற்றுச்சூழல் பற்றாக்குறை அதிகமாகவுள்ளது. குறைந்தது 26.8 சதவீதம் பேர் சுற்றுச்சூழல் குறியீட்டின் மூன்று அம்சங்களில் ஏதாவது ஒன்றை பெற முடியாமல் இருக்கின்றனர்.
8.வட மாசிடோனியாவில் வறுமை வேகமாக குறைந்து வருகிறது. அதற்கு அடுத்தபடியாக சீனா, அர்மேனியா, கஜகஸ்தான், இந்தோனீசியா, மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் இந்த பட்டியலில் உள்ளன. இந்த நாடுகள் தங்களின் வறுமை குறியீட்டை வருடத்திற்கு 12 சதவீத அளவு குறைத்துள்ளது.
9.கோவிட் 19க்கு முந்தைய காலகட்டம் வரை 47 நாடுகள் 2015-2030 ஆண்டுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில் வறுமையை பாதியாக குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. ஆனால் தற்போது மிகவும் ஏழ்மையான நாடு உட்பட 18 நாடுகள் அந்த பாதையிலிருந்து விலகி விட்டன.
10.இந்த பெருந்தொற்று சூழலில் போஷாக்கு மற்றும் பள்ளி வருகை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு அம்சங்கள் அடங்கிய சர்வதேச குறியீட்டை கணித்தபோது இந்த பிரச்சனைகளை சரி செய்யவில்லை என்றால் அது பத்து வருட காலமாக நாம் ஏற்படுத்திய மாற்றங்களை அழித்துவிடும் என்று தெரிகிறது.
பல அம்சங்கள் அடங்கிய வறுமை குறியீடு, வருமானத்தை வைத்து மட்டும் கணக்கிடாமல், பாதுகாப்பான குடிநீர், கல்வி, மின்சாரம், உணவு மற்றும் பல குறியீடுகளை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை - டிரம்ப் திட்டம்
- கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பிகார் பெண் கத்திப் பேசியதால் கைது
- கொரோனா - குணமான பின்னும் தொடரும் ஆபத்துகள்: தமிழக மருத்துவர்கள் தடுப்பது எப்படி?
- கொரோனாவால் இந்தியாவுக்கு ஒரு நற்செய்தி; ஆனாலும் மகிழ்ச்சி நீடிக்காது - ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












