இந்தியா - சீனா எல்லை பதற்றம்: உண்மையில் படைகளை விலக்குகிறதா சீனா?

Indo-China border dispute: what is there in China's statement that raises questions on Modi government

பட மூலாதாரம், MEA India

படக்குறிப்பு, இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி
    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி இந்தி

இந்திய - சீன எல்லை மோதலுக்குப் பிறகு, அங்கு மீண்டும் அமைதியைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசியில் பேசிய பின்னர் எல்லையில் நிலவும் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக இருநாடுகளும் தங்களது அறிக்கையை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் அறிக்கை என்ன கூறப்பட்டுள்ளது?

சமீபத்தில் எல்லையில் நடந்த மோதல் தொடர்பாகச் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்த எல்லையில் அமைதி நிலவுவது அவசியம் என்பதை இருதரப்பும் ஒப்புக்கொண்டன என இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை, இருதரப்பும் திரும்பப்பெறுவது என்றும், அமைதியான சூழலைத் தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்றதொரு சம்பவம் நடக்கக் கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது என்கிறது இந்தியாவின் அறிக்கை.

மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டை (Line of Actual Control) இரு நாடுகளும் பின்பற்ற வேண்டும். இதை மாற்றுவதற்கு ஒருதலைபட்ச நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

எல்லை பிரச்சனை குறித்து அடுத்த கட்டமாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் போன்ற விவரங்கள் இந்தியா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் அறிக்கையைப் போல அல்லாமல், சீன அறிக்கையின் தொனி வேறு விதமாக இருந்தது.

சீன அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது?

கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த விஷயங்களில் எது சரி, எது தவறு என்பதில் தெளிவாக இருக்கிறோம். சீனா தனது பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதிலும், எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதிலும் உறுதியாக உள்ளது என சீனா சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு ஆசிய நாடுகளின் பகை; உலகை எப்படி பாதிக்கும்?

பட மூலாதாரம், Getty Images

இரு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தவும்,வேறுபாடுகளை அதிகரிப்பதைத் தவிர்க்கவும் தங்களுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என நம்புவதாக அந்த அறிக்கையில் சீனா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இருநாடுகள் இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல எல்லையில் படைகளை விலக்குவது அல்லது குறைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் சீனாவின் அறிக்கையில் இடம்பெறவில்லை. அதே போல மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு குறித்து சீனா எதுவும் பேசவில்லை.

சீனாவின் இந்தப் போக்கு குறித்துப் பலர் தங்களது கண்டனங்களை ட்விட்டரில் பதிவு செய்துள்ளனர்.

தனது பிராந்திய இறையாண்மையைப் பாதுகாப்பதாகச் சீனா கூறுகிறது; அப்படி என்றால் கல்வான் பள்ளத்தாக்கு தனது பிராந்தியம் எனச் சீனா கூறுகிறதா என இந்தியா சீனா உறவு குறித்துத் தொடர்ந்து கவனித்து வரும் பிரம்மா செல்லானி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியும், ஏற்கனவே இருந்த நிலை நீடிக்க வேண்டும் என ஏன் வலியுறுத்தப்படவில்லை? இந்தியப் பிராந்தியத்தில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தச் சீனா ஏன் அனுமதிக்கப்பட்டது? கல்வான் பள்ளத்தாக்கின் பிராந்திய இறையாண்மையைப் பற்றி ஏன் இந்தியா குறிப்பிடவில்லை? எனக் கேட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இது குறித்து பிபிசியிடம் பேசிய இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ்,''இந்தியச் சீன பிரதிநிதிகளுக்கிடையில் ஒரு நீண்ட உரையாடலுக்குப் பிறகு, ஒரு பொதுவான அறிக்கை வெளியாகவில்லை என்பது உண்மைதான். ஆனால், இது குறித்துக் குற்றஞ்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல'' என்கிறார்.

மேலும் அவர்,'' பதற்றத்தைக் குறைப்பதிலும், உறவுகளை மேம்படுத்துவதிலும் தற்போது இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்'' என்கிறார்.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதை இரண்டு அறிக்கைகளும் வலியுறுத்துகின்றன எனவும் அவர் கூறுகிறார்.

''பதற்றத்தைக் குறைத்த தயார் என்பதற்கான அறிகுறிகளை இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து எல்லையில் படைகள் குறைக்கப்படுகிறது என்ற செய்திகளும் வருகின்றன. இது ஒரு நல்ல செய்தி. இரு நாடுகள் இடையிலான பதற்றத்தை அரசியலாக்கும் நேரம் இதுவல்ல'' என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :