கொரோனா வைரஸ்: 'தமிழக அரசின் முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது' - எடப்பாடி பழனிசாமி

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தியதால் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதாகவும், தமிழக அரசு எடுத்த முடிவுக்கு பலன் கிடைதுள்ளது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் 750 படுக்கை வசதிகளைக் கொண்ட, கிங்ஸ் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின்னர் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தமிழகம் முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் உள்ளன என்று கூறினார்.
இதற்கு முன் பல்வேறு தருணங்களில் கூறியதைப் போலவே, தமிழகத்தில் சமூகப் பரவல் இல்லை என இன்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஆனால், தமிழகத்தில் சமூகப் பரவல் இருந்தும் அதை மாநில அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகளும், சமூக ஊடகப் பயனர்களும் தொடர்ந்து விமர்த்தித்து வருகின்றனர்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

கிண்டி கிங்ஸ் மருத்துவமனை எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய மருத்துவமனைகளுக்கு இணையாக இருக்கும் என்று முதலமைச்சர் கூறினார்.
இந்த மருத்துவமனை 127 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி வேறு என்ன பேசினார்?
- சென்னையில் வீடு வீடாகச் சென்று கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
- கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் அதே சமயம் மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதும் அவசியம்.
- கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
- ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி.
- இத்தியாவிலேயே தமிழகத்தில்தான் சிறப்பான கொரோனா தடுப்பு முறை உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












