தமிழகத்தில் கொரோனா வைரஸ்: சென்னை பகுதி தவிர பிற மாவட்டங்களிலும் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 39 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 64,603ஆக உயர்ந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை அளித்துள்ள தகவல்களின்படி, இன்று அடையாளம் காணப்பட்ட 2,478 பேரில் 2,516 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 10 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

மீதமிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக கர்நாடகத்தில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கு இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட 2,546 பேரில் 1,380 பேர் சென்னையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டில் 146 பேரும், கடலூரில் 28 பேரும், திண்டுக்கல்லில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 59 பேரும், மதுரையில் 137 பேரும், தேனியில் 48 பேரும் திருவள்ளூரில் 156 பேரும், திருவண்ணாமலையில் 110 பேரும், திருச்சியில் 40 பேரும், தூத்துக்குடியில் 38 பேரும் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ்

சென்னை தவிர்த்து மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு நகரங்களில் கொரோனா தொற்று 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது.

சென்னையில் மட்டும் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,205ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 4,030 பேரும் திருவள்ளூரில் 2,826 பேரும் காஞ்சிபுரத்தில் 1,286 பேரும் இதுவரை ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 1,227 பேர் குணமடைந்துள்ளனர். ஆகவே குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35,339 ஆக உயர்ந்திருக்கிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 28,428ஆக இருக்கிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

இன்று 39 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் 11 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 26 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 833ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 57 பேரும் திருவள்ளூரில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களில் 3 பேருக்கு வேறு எவ்வித இணை நோயும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 29 பேர் ஆண்கள். 10 பேர் பெண்கள்.

இன்று உயிரிழந்தவர்களில் 22 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் செங்கல்பட்டைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா இரண்டு பேரும் சேலம், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலையிலிருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: