கொரோனா வைரஸ்: தொடங்கும் ரயில் சேவை; புதிய விதிமுறைகள் என்னென்ன? - விரிவான தகவல்கள்

ரயில்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்தியாவில் முதன்முதலில் ஒரே நாளில் 4200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட அதேசமயத்தில் இந்திய ரயில்வே மே மாதம் 12ஆம் தேதி முதல் ரயில் சேவையைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இந்த முடிவின் முதல் கட்டத்தில் 15 ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 25 தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் முன்னரே பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது மூன்றாம் கட்ட முடக்கம் முடியும் முன்னரே ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்ட இந்திய அரசின் இந்த முடிவு அதிர்ச்சியைத் தருகிறது.

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவை முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸும் வரவேற்கின்றது.

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம், "இதே போல் அரசு சாலை மற்றும் விமானப்போக்குவரத்து குறித்தும் ஆலோசிக்க வேண்டும்," என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால் சிலர் இந்த முடிவு குறித்து கேள்வியும் எழுப்பியுள்ளனர்.

அரசியல் தலைவர் மற்றும் ஆர்வலரான யோகேந்திர யாதவ், பிபிசியின் செய்தியைப் பகிர்ந்து இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அவருடைய முக்கிய கண்டனம் முதலில் இயக்கும் 15 ரயில்களும் ஏசி பெட்டிகள் கொண்ட ரயில்கள் என்பதே ஆகும்.

அதாவது டெல்லியில் இருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஏசி பெட்டிகளை கொண்ட ரயில்களாகும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த ரயில்களின் பதிவு மே 11ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஐஆர்டிசியில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

செவ்வாய்கிழமையிலிருந்து இயங்க இருக்கும் இந்த ரயில் சேவைக் குறித்து ரயில்வே துறை, ரயில் இயங்கும் நேரம், பயணச்சீட்டின் கட்டணம் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புது விதிமுறைகளை விதித்துள்ளது.

ஐஆர்சிடிசியின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மஹேந்திர பிரதாப் மால், இந்த புது விதிமுறைகள் குறித்து பிபிசியிடம் பேசினார். "இந்த 15 ராஜ்தானி ரயில்களின் பயணக் கட்டணம் முன்பு இருந்ததைப்போன்று தான் இருக்கும் ஆனால் சாப்பாட்டிற்காக கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும் முடக்கத்தின் முன்பு ராஜ்தானி ரயில்களில் இருந்த `மாறும் கட்டண அமைப்பு` (dynamic pricing) இப்போதும் தொடரும். அதாவது ரயில்களில் சீட்டுகள் பதிவாக பதிவாக அதற்கேற்றாற் போல் கட்டணம் உயரும் எனக் கூறியுள்ளார்.

இந்த ரயில்களில் தண்ணீர் மற்றும் பார்சல் செய்த சாப்பாடு கிடைக்கும் ஆனால் படுக்கைகள் தரப்பட மாட்டாது.

ஒரு ரயில் பெட்டியில் 1ஏசி, 2ஏசி, 3ஏசி என பெட்டிகள் இருக்கும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஏசியில் சமூக விலகலுக்கான சிக்கல் ஏதும் வராது. ஆனால் 3ஆம் கட்ட ஏசி கோச்சில் 72 சீட்டுகள் இருக்குமா என இப்போது கூற இயலாது. ஏனென்றால் வெளி மாநில தொழிலாளர்களுக்கு என இயக்கப்படும் ரயில்களில் 1200 பேருக்கு பதில் 1700 பேரை ஏற்ற பேச்சு வார்த்தை நடைப்பெற்று கொண்டிருக்கிறது." என்றார்.

ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

இந்த புதிய விதிமுறைகளின்படி:

  • 7 நாட்களுக்கு முன்னால் பயணத்திற்கு பதிவு செய்ய வேண்டும்
  • தக்கல் பதிவு இருக்காது
  • ஆர்ஏசி டிக்கெட் கிடைக்காது.
  • ஏஜெண்ட்களால் புக்கிங் செய்ய முடியாது
  • 90 நிமிடங்களுக்கு முன்னர் பயணிகள் ரயில் நிலையத்திற்கு வர வேண்டும்.
  • ரயில் பயணம் தொடங்கும் 24 மணி நேரத்திற்கு வரை டிக்கெட்டுகள் பதிவை நீக்கலாம்.

வாரத்தில் எத்தனை முறை ரயில்கள் இயங்கும்?

ரயில்கள் இயங்கும் பட்டியல் இன்னும் முழுமையாக வரவில்லை என்றாலும் இந்த 15 ரயில்களில் குறைந்த தூரம் செல்லும் ரயில்கள் மட்டும் தினமும் இயங்கும்.

நீண்ட தூரம் என்றால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இயக்கப்படும். ஆனால் சாதரணமாக நிற்கும் அனைத்து இடங்களிலும் நிற்காது குறைந்த இடங்களில் மட்டுமே நிற்கும். முடக்கத்தின் முன் எவ்வளவு நாள் ஒரு வாரத்தில் சென்றதோ அவ்வளவு நாள் இயங்கும்.

மக்கள் வீட்டை விட்டு எவ்வாறு ரயில் நிலையம் வருவார்கள் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது. இது குறித்து விளக்கிய ரயில்வே அமைச்சகம், பதிவு உறுதியான டிக்கெட்டுகளைக் காட்டியவுடன் மக்கள் மற்றும் ரயில் ஓட்டுநர்களுக்கு வீட்டிலிருந்து ரயில்நிலையத்திற்கு மற்றும் ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் வசதிகள் வழங்கப்படும்.

அதிகமாக கொரோனா பரவும் இடங்களுக்கு எப்படி செல்லும்?

இந்த ரயில்கள், டெல்லியில் இருந்து ஹெளரா, பாட்னா, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது.

ஆனால் மும்பை சென்ட்ரல் மற்றும் அகமாதாபாத் போன்ற நகரங்களில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் அதிகரித்துள்ளனர். மும்பை இப்போது கொரோனா தொற்று அதிகம் பரவும் இடமாக உள்ளது.

கொரோனா வைரஸ்

அங்கே மக்கள் இறங்கியவுடன் வீட்டிற்கு செல்கிறார்களா எனவும் தினமும் அவர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டும் கண்காணிக்கப்படுவார்கள். இது மாநில அரசின் சுமையை மேலும் கூட்ட வாய்ப்புள்ளது.

அதே போல் மேற்கு வங்கத்தின் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இந்த ரயில்கள் இயக்கப்படும் என்ற முடிவால் மாற்றுகருத்து நிலவுவதையும் பார்க்க முடிகிறது. இந்த சமயத்தில் பயணிகள் ரயில் குறித்த மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியின் கருத்தையும் நம்மால் பார்க்க முடிகிறது.

சமூக விலகலை எவ்வாறு கடைப்பிடிக்கப் போகிறது அரசு?

ரயில் நிலையத்தில் பயணிகள் ஸ்க்ரீனிங் செய்யப்படுவார்கள். பயணம் செய்பவர்களுக்கு சானிடைஸர்கள் வழங்கப்படும். ரயில் நிலையத்துக்கு வருவதிலிருந்து பயணம் முழுக்க பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் ரயிலில் இருந்து இறங்கியவுடன் அந்தந்த மாநில அரசின் விதிமுறைகள்படி நடந்து கொள்ள வேண்டும். அதாவது, மாநில அரசு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினாலோ வீட்டில் தனிமைப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறினாலோ அதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ரயில்களில் ஏசி குறித்த விதிமுறைகள்

அரசு இயக்கவுள்ள 15 ரயில்களும் ஏசி பெட்டிகள் என அறிவித்துவிட்டது. ஆனால் சென்ட்ரலைஸுடு ஏசி ஆபத்தானது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பப்ளிக் ஹெல்த் பவுண்டேஷனின் தலைவர் ஸ்ரீநாத் ரெட்டி குறிப்பிடுகையில், விமானத்திலும் இதே வசதிதான் உள்ளது. அதனால் சுற்றுசூழலுக்கு ஏற்ற அளவு வைத்தால் சரியாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் இப்போது கொரோனா சூழலில் நாம் வாழ பழக வேண்டும். இந்த தொற்று காரணமாக எப்போதும் போக்குவரத்து சேவைகளை மூடி வைக்க இயலாது. இதை எப்போதாவது ஒருகட்டத்தில் தொடங்கத்தான் வேண்டும் என்றார்.

வெளிமாநில தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்

வெளிமாநில தொழிலாளர்களுக்கென இயங்கும் சிறப்பு ரயில் ஓடிக்கொண்டுதான் இருக்கும். இதுவரை 468 சிறப்பு ரயில்கள் சென்றிருக்கிறது. 4 லட்சம் தொழிலாளர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என ரயில்வே துறை கூறுகிறது.

மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப இன்னும் 300 சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களுக்கென இயக்க இருக்கிறோம் என ரயில்வே துறையில் அமைச்சர் பியூஷ் கோஷல் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரயில்வே துறையின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கும் இன்று காலை கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: