கொரோனா வைரஸ் ஊரடங்கு: பணிப்பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டதா?

கொரோனா வைரஸ் ஊரடங்கு: வேலையாட்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு வேலையாட்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர்களை வீட்டினுள் அனுமதிக்கலாமா வேண்டாமா என்று பல நடுத்தர மக்களிடம் விவாதத்தை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து விவரமாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே.

ஒருமுறை நான் என் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தபோது, கணவரா அல்லது வீட்டுப்பணிப் பெண் வேண்டுமா என்று கேட்டால், நான் பணிப்பெண்ணைதான் தேர்வு செய்வேன் என்று கூறினார்.

அது விளையாட்டாக கூறப்பட்டது என்றாலும், இந்தியர்கள் எந்தளவிற்கு வீட்டு வேலையாட்களை சார்ந்திருக்கிறார்கள் என்பதை இது புரிய வைக்கிறது.

இந்தியாவில் சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலையாட்களாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன.

அதுவும் மிகவும் குறைந்த ஊதியத்திற்கு. ஆனால், அதிகாரப்பூர்வமற்ற தரவுகளை நாம் ஆராய்ந்தால், சுமார் 5 கோடி மக்கள் வீட்டு வேலையாட்களாக பணிபுரிகிறார்கள். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், கடந்த ஆறு வாரங்களாக லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்கள் வீட்டு வேலையாட்கள் இல்லாமல் தாங்களே தங்கள் வேலைகளை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடுமையான ஊரடங்கு உத்தரவால், சமையல்காரர்கள், குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் ஆட்கள், ஓட்டுநர்கள் என யாருமே கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லவில்லை.

ஊரடங்கு தொடங்கியபோது இது மூன்று வாரம்தான் என நினைத்து பலரும் அவர்களே அவர்கள் வேலையை செய்ய ஒப்புக்கொண்டனர். சில பாலிவுட், டாலிவுட் பிரபலங்கள் எல்லாம், தங்கள் வீடுகளை தாங்களே சுத்தம் செய்வது, சமைப்பது, பாத்திரங்களை கழுவுவது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்.

ஆனால், தற்போது இது மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட, பலரும் தங்கள வீட்டு வேலையாட்கள் இல்லாத கஷ்டத்தை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தனியாக இருக்குபாோபம் முதியவர்கள் குறித்த கவலையும் எழுந்துள்ளது. நல்ல உடல்நலம் இல்லாதவர்களும் வீட்டு வேலையாட்களின் உதவி இல்லாமல் எப்படி சமாளிக்கிறார்கள் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் மிகுந்த துன்பத்தில் இருக்கும் வீட்டு வேலையாட்கள்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

"இந்த ஊரடங்கு காலத்தில் பலரும் தங்கள் வேலையை இழந்துள்ளனர். பலருக்கும் இந்தக்காலத்திற்கான ஊதியம் கிடைக்கப்பெறவில்லை" என்கிறார் பிபிசியிடம் பேசிய மீனாட்சி குப்தா ஜெயின்.இவர் வீட்டு வேலையாட்களை பணியமர்த்த Helper4U என்ற இணையதளத்தை நடத்தி வருகிறார்.

கோவிட் 19 நெருக்கடி காலத்திற்காக நாங்கள் அளித்த உதவி எண்ணுக்கு தினமும் 10ல் இருந்த 15 மெசேஜுகள் வருவதாக அவர் கூறுகிறார்."தங்களிடம் இருந்த பணம் காலியாகிவிட்டதாக கூறுகிறார்கள்.

தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உணவளிப்பது என்று தெரியவில்லை என்கிறார்கள். நாங்கள் அவர்கள் அருகில் இருக்கும் தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொள்ள வைக்கிறோம்.

கொரோனா வைரஸ்

அவர்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் தர அது வழிவகை செய்யும்" என்கிறார் குப்தா ஜெயின்

டெல்லியை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் சோனிகா வர்மா கடந்த திங்கட்கிழமையில் இருந்து பணியில் மீண்டும் சேர்ந்துள்ளார். தன்னை வேலைக்கு வைத்திருப்பவர்கள் ஊரடங்கு காலத்தில் வராமல் இருந்தபோதும் தனக்கு ஊதியம் வழங்கியதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

"நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். என் கணவர் ஆட்டோ ஓட்டுநார். ஆனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அவர் எங்கேயும் போக முடியாமல் வீட்டில் இருக்கிறார். என்னாலும் இவ்வளவு வாரமாக வேலைக்கு போக முடியவில்லை. எனக்கும் வேலைபோய் விடுமோ என்று மிகுந்த பதற்றத்தில் இருந்தேன்" என்று அவர் கூறுகிறார்.

சோனிகா வர்மா
படக்குறிப்பு, சோனிகா வர்மா

ஆனால், அதே வீட்டு வேலை பார்க்கும் தனது சகோதரிகளுக்கு ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

"என் சகோதரிகள் வேலை பார்த்த வீடுகளில், மார்ச மாதத்திற்கான ஊதியம் கிடைத்தது. ஆனால், ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. மீண்டும் பணிக்கு திரும்பும்போதுதான் சம்பளம் தருவேன் என்று கூறிவிட்டார்கள். ஆனால், இப்போதுவரை வேலைக்கு அழைக்கவில்லை" என்று சோனிகா கூறுகிறார்.

இதற்கு காரணம் பல குடியுரிப்புப் பகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலையாட்களை உள்ளே அனுமதிக்கலாமா வேண்டாமா என்ற விவாதம் இன்னும் நடந்துக் கொண்டிருக்கிறது.

டெல்லிக்கு சற்று வெளியே உள்ள நொய்டாவின் ஒரு பெரும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார் அனில் திவாரி. வீட்டு வேலையாட்களை மீண்டும் பணிக்கு வர அனுமதிக்கலாம் என்ற எண்ணத்தில் இவர் இருக்கிறார்.

"இங்கு 735 வீடுகள் இருக்கின்றன. பல முதியவர்களும் தனியே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இந்த சூழல் மிகுவும் சவால் மிகுந்ததாக இருக்கிறது என்கிறார் அங்கு வசிக்கும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி குல்தீப் சிங் சொக்கர்.

80 வயதாகும் அவர், புற்று நோயில் இருந்து மீண்டு வந்தவர். உடல்நலம் சரியில்லாத 75 வயதான தனது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் வேலையாட்களை வீட்டிற்குள் அனுமதிக்க சற்று தயக்கம் காட்டுகிறார் என் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பிங்கி பாட்டியா.

முதுகு வலியால் அவதிப்படும் அவர், உதவி ஏதும் இல்லாமல் தன் வேலையை தானே பார்த்து வருகிறார்.

"வேறு வழியில்லை. சமைப்பது, பாத்திரங்களை கழுவுவது, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என நாங்களே அனைத்து வேலைகளையும் செய்கிறோம்" என்று அவர் கூறுகிறார்.

60களில் இருக்கும் பாட்டியாவின் கணவருக்கு இதய பிரச்சனை இருக்கிறது.

Banner image reading 'more about coronavirus'

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்றால் ஆபத்து அதிகம் என அறிவுறுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் இருவரும் கடந்த ஆறு வாரங்களாக வீட்டினுள்ளேயே இருக்கிறார்கள்.

"என் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களின் ஓட்டுநர்தான் எங்களுக்கு பால் மற்றும் காய்கறிகளை வாங்கி தருகிறார்" என்று பாட்டியா கூறுகிறார்.

ஆனால், குப்பைகளை அகற்றுபவர்கள், காய்கறி விற்பவர்கள எல்லாம் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கும்போது, ஏன் வீட்டு வேலையாட்களை மட்டும் அனுமதிக்க மறுக்கிறார்கள் என கேள்வி எழுப்புகிறார் குப்தா ஜெயின்.

"அவர்களுக்கு முகக்கவசம், சானிடைஸர்கள் மற்றும் உங்கள் வீட்டில் அணிந்து கொள்ள மட்டும் தனி உடை வழங்குங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுங்கள். ஆனால், அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கும் நேரம் வந்துவிட்டது" என்று அவர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: