இந்தியாவில் கொரோனா வைரஸ்: அதிகமாக இறக்கும் ஆண்கள் - 10 தகவல்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ்: அதிகமாக இறக்கும் ஆண்கள் - 10 தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அளவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த 10 முக்கியத் தகவல்கள்.

1.இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1718 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2.இதன் மூலம் இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக உயர்ந்துள்ளது.

3.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸால் 67 பேர் மரணமடைந்துள்ளனர்.

4.இதன் மூலம் இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1074-ஆக உயர்ந்துள்ளது.

5.உயிரிழந்தவர்களில் 78 விழுக்காட்டினர், கொரோனா வைரஸ் தொற்று உண்டாகும் முன்னரே வேறு ஏதாவது ஒரு உடல் நலக்குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

கொரோனா வைரஸ்

6.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 23,651.

7.கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் விழுக்காடு 3.2 %-ஆக இருக்கிறது. இதில் ஆண்கள் 65 % பேர். பெண்கள் 35 % பேர்.

8.தற்போது வரை கொரோனா நோயாளிகள் 8,324 பேர் குணமடைந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கையில் 25.19 % விழுக்காடாகும். 14 நாட்களுக்கு முன்னர் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் விழுக்காடானது 13.06 %-ஆக இருந்தது.

9.கொரோனாவால் அதிகம் பாதிகப்பட்டுள்ள முதல் ஐந்து மாநிலங்கள் முறையே மகராஷ்டிரா,குஜராத்,டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை உள்ளன. தமிழகம் ஆறாம் இடத்தில் உள்ளது.

10.கொரோனா தொற்றை உறுதிப்படுத்துவதற்கு RTP-PCR (Reverse transcription polymerase chain reaction) பரிசோதனையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: