கொரோனா ஊரடங்கு: ஏழைகளுக்கு உதவ ரூ. 65 ஆயிரம் கோடி தேவை - ரகுராம் ராஜன்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 30)ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனுடன் கலந்துரையாடினார். இதில் குறிப்பாக தற்போதைய சூழலில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார தாக்கம் மற்றும் அதன் தீர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

அவர்கள் உரையாடலின் சில முக்கிய கருத்துக்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

ராகுல்காந்தியுடன் ரகுராம் ராஜன்

பட மூலாதாரம், ANI

  • ஊரடங்கை தளர்த்துவதில் நாம் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீண்டகாலத்திற்கு உணவு வழங்கிட முடியாது எனவே ஊரடங்கை தளர்த்துவதை படிப்படியாக மேற்கொள்ள வேண்டும்.
  • பெரிய எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் யாருக்கேனும் தொற்று இருப்பது தெரிந்தால் அதை கண்டறிந்து மேலும் தீவிரமாக சோதனை மேற்கொள்ள வேண்டும். தற்பொதைய சோதனை முறைகளை காட்டிலும் இது சற்று எளிதாக இருக்கும்.
  • ஏழைகளுக்கு உதவ 65,000 கோடி ரூபாய் தேவைப்படும் ஆனால் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 200 லட்சம் கோடியாக இருக்கும்போது அதை ஒப்பிட்டால் இது பெரிய தொகை இல்லை.
  • நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதத்தில் திட்டங்களை வகுக்க வேண்டும். ஊரடங்கை தொடர்ந்து அமல்படுத்துவது எளிது ஆனால் அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • தற்போதைய சூழலை இந்தியா தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்தியாவின் தொழில்துறை மற்றும் விநியோக சங்கிலிக்கான ஒரு வாய்ப்பாக இதை மாற்றிக் கொள்ள முடியும்.
  • இந்த நெருக்கடியிலிருந்து வெளிவந்த பிறகு உலக பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் சூழல் ஏற்படும்.
  • சவால்கள் பெரிதாக இருக்ககூடிய சமயத்தில் நாம் பிரிந்திருக்க முடியாது. தற்போதைய சூழலில் சமூக ஒருமைப்பாடே முக்கியம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: