கொரோனா வைரஸ்: ஐரோப்பிய நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர முற்றிலும் தடை

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐரோப்பிய தாராள வணிக அமைப்பை சேர்ந்த நாடுகள், துருக்கி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குப் பயணிகள் வருவது, கிரீன்விச் நேரப்படி மார்ச் 18 நள்ளிரவு முதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

இந்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் இது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

மார்ச் 18 முதல் ஐக்கிய அரபு எமிரேட், கத்தார், ஓமன், குவைத் ஆகிய நாடுகளில் இருந்தோ, அந்த நாடுகளின் விமான நிலையங்களில் இறங்கி ஏறியோ இந்தியா வருகிற பயணிகள் 14 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

இந்த இரு உத்தரவுகளும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை சித்தி விநாயகர் கோயில் மூடல்

மகாராஷ்டிரத்தில் மேலும் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.

சமீபத்தில் இந்த மாநிலத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர் துபாய்க்கு பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவில் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொல்லியல் துறைக்கு கீழுள்ள அனைத்து நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை மார்ச் 31 வரை மூடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் பிரஹலாத் படேல் ஏஎன்ஐ செய்தி முகைமையிடம் கூறியுள்ளார்,

கேரள மாநிலத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 24 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பிரனயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். முதலில் வெளிநாட்டவருக்கு மட்டுமே இருந்த கட்டுபாடு இப்போது அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மஹாராஷ்டிராவில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியாவில் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் வரும் மார்ச் 19 முதல் 31-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை மூன்று நாட்களில் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று இந்திய உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் உள்பட பல இடங்களிலும் தெர்மல் ஸ்கிரீன் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே அங்கு வருவோர் அனுமதிக்கப்பட்டார்கள்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

வரும் மார்ச் 31-ஆம் தேதி வரை, டெல்லியில் உள்ள இரவுவிடுதிகள், உடற்பயிற்சிகூடங்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவை அனைத்தும் மூடப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

திருமணங்களை தவிர 50 பேருக்கு மேலாக கூடும் அனைத்து நிகழ்வுகளும் அனுமதிக்கப்படாது என்று அரவிந்த் கேஜ்ரிவால் மேலும் தெரிவித்துள்ளார்.

திருமண வைபவங்களையும் தள்ளிப்போட முடியுமானால் அவ்வாறு செய்யுமாறு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

திரைப்பட பணிகள் நிறுத்தம்

கொரோனா காரணமாக வலிமை, மாநாடு, அண்ணாத்த போன்ற படங்களின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நாளை (17.03.2020) ஜோதிகா நடிக்கும் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில்,உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு குறித்தும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் சூழலில், அகில இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், அனைத்து இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் மாமன்றம் உட்பட அனைத்து அமைப்புகளும் திரைப்பட பணிகளை 19.03.2020 முதல் நிறுத்தி வைப்பது என்று முடிவெடுத்துள்ளது.

நமது மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் தற்போது குறைவாக உள்ளது என்றாலும், திரைப்படத் துறையில் பாதுகாப்பும், சுகாதாரமும் மிகவும் குறைவாக உள்ளதால் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனமும் 19.03.2020 முதல் திரைப்படம், தொலைக்காட்சி, விளம்பரப் படங்கள் போன்ற அனைத்து பிரிவு திரைப்பட பணிகளையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.'

படம் வெளியாகும் தேதி ஒத்திவைப்பு

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்த 'காடன்' திரைப்படமும் கொரோனா அச்சம் காரணமாக பட வெளியீடு தள்ளிப் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பையில் இயங்கும் இந்தியப் பட தயாரிப்பாளர் சங்கமும் வருகிற 19ஆம் தேதியிலிருந்து 31ஆம் தேதி வரையில் படப்பிடிப்பை ஒத்தி வைத்துள்ளது. அதோடில்லாமல் 30ஆம் தேதியன்று நிலைமையைப் பொறுத்து படப்பிடிப்பை மறுபடி தொடங்கலாமா என்பது பரீசிலனை செய்யப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: