கோவை இந்து முன்னணி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு

கோவையில் கடந்த வாரம் இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆனந்தன் தாக்கப்பட்டதிலிருந்து பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 10) அதிகாலை காட்டூர் பகுதியில் உள்ள இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக அக்கட்சியினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த வாரம் கணபதி பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பாண்டி மற்றும் அகில் ஆகிய இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

இந்து முன்னணி நிர்வாகி ஆனந்தன் தாக்கப்பட்ட நாளிலிருந்து இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த ஆட்டோக்களின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கோவையில் மிகவும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாவட்டச் செயலாளர் இக்பால் மீது மர்ம நபர்கள் இன்று மதியம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
படுகாயம் அடைந்த இக்பால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த அக்கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் மருத்துவமனையில் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், இக்பால் தாக்கப்பட்டதை கண்டித்து ஆத்துபாலம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இடையே தொடரும் வன்முறை தாக்குதல்களால் மாநகரில் பலத்த போலீஸ் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மற்றும் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பதற்றத்தை தணிக்கும் வகையில் மாநகர காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மதத் தலைவர்களுடனான சமூக நல்லிணக்க கூட்டம் நேற்று நடைபெற்றது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இரானில் ஒரே நாளில் 54 பேர் உயிரிழப்பு; இத்தாலியில் நாடு முழுவதும் பயணத்தடை
- ஆப்கானிஸ்தான் தேர்தல் முடிவில் 2 பேர் ஏட்டிக்குப் போட்டியாக அதிபர் பதவி ஏற்பு
- மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விமர்சனங்களுக்கு பதிலளிப்பாரா விஜய்?
- கொலைகார ஏரியிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் - சகாரா பாலைவன நாட்டின் கதை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












