CAA - NRC Protest: தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள்

chennai protest

தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர், என்.சி.ஆர்.க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க ஆறு சிறப்பு அதிகாரிகளை தமிழக டிஜிபி திரிபாதி நியமித்துள்ளார்.

News image

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்தில் பல கட்டங்களாக நடந்த போராட்டங்களில் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் வெள்ளியன்று காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர்.

வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை எதிர்த்து தற்போது பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வண்ணாரப்பேட்டையில் கூடியுள்ள பெண்கள் பலர், தெற்கு டெல்லியில் கடந்த இரண்டு மாதங்களாக ஷாஹீன்பாக் பகுதியில் நடைபெறும் தொடர் போராட்டம் போலவே தாங்களும் குழந்தைகளுடன் வந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

chennai protest

இந்நிலையில், தமிழகத்தில் சட்ட ஒழுங்கை உறுதிப்படுத்த, போராட்டங்கள் நடைபெறும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்கவும் டிஜிபி ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷைலேஷ் குமார் யாதவ், சாரங்கன், ராமர்,ராமகிருஷ்ணன், செந்தில் குமார், செல்வராஜ் உள்ளிட்ட ஆறு அதிகாரிகளும் மத்திய மண்டலம்,தஞ்சாவூர், சீர்காழி, நாகப்பட்டினம், மன்னார்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல இடங்களில் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: