பாகிஸ்தானுக்கு போகாத முஸ்லிம்கள் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை: யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளன. தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், இந்த கடைசி சந்தர்ப்பத்தை விட்டுவிட எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை.
பாஜகவின் கிட்டத்தட்ட அனைத்து பெரிய தலைவர்களும் டெல்லி சட்டமன்றத் தேர்தலில், கட்சியின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் டெல்லியில் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். அவருடன் பிபிசி நிருபர் நிதின் ஸ்ரீவாஸ்தவா சிறப்பு நேர்காணல் நடத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: முந்தைய பல தேர்தல்களைப் போலவே, பாஜகவும் தனது 'பிரம்மஸ்திரம்' யோகி ஆதித்யநாத்தை பிரசாரத்திற்காக களமிறக்கியுள்ளதாகத் தெரிகிறது. நீங்கள் தேர்தல் பிரச்சார மைதானத்திற்குள் நுழைந்தவுடன் நிலவரம் ஏன் சூடாகிறது?
பதில்: இதோ பாருங்கள். உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடக்கும்போது, நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த தொண்டர்களும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்கிறார்கள். அதேபோல, நானும் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டன் என்பதால் தான் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க இங்கு வந்துள்ளேன். நாங்கள் பிரச்சனை பற்றி பேசுகிறோம். வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் தேர்தலில் முன்வைக்கிறோம். நல்லாட்சி மற்றும் தேசியவாத பிரச்சனைகளைப் பேசுகிறோம்.
கேள்வி: வளர்ச்சி, நல்லாட்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்துவது பற்றி மட்டுமே பிரசாரம் செய்கிறீர்களா? பாகிஸ்தான் என்றும், ஷாஹீன் பாக் என்றும் குரல்கள் எழுகின்றனவே? காஷ்மீரில் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் ஷாஹீன் பாக்கில் ஆர்ப்பாட்டம் செய்து சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்புகிறார்கள் என்ற குரல் கேட்கிறது. அது மட்டுமல்ல, பிரியாணி வாங்கிக் கொடுக்கிறார்கள் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது. அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவைப் பிரித்தார்கள், எனவே இந்த மக்கள் ஒரே இந்தியா, சிறந்த இந்தியா (ஏக் பாரத், ஷ்ரேஷ்ட் இந்தியா) என்பதற்கு எதிரானவர்கள் என்று கூறுகிறீர்கள்.
பதில்: நாட்டின் சொர்க்கத்தை நரகமாக்கும் விஷயத்தை, நாட்டினுள் பிரிவினைவாதம் மற்றும் அராஜகத்திற்கு துணைபோகும் சட்டத்தை அகற்றினால் ராகுல் காந்திக்கும் கேஜ்ரிவாலுக்கும் சிக்கல் ஏற்படுவது ஏன்? காங்கிரஸ் இயற்கையாகவே நாட்டைப் பிரிக்கும் குற்றவாளிதான். நாட்டின் இறையாண்மையை மேம்படுத்துவற்கான நடவடிக்கைகளை கெடுக்கிறார்கள். ஒரே இந்தியா, சிறந்த இந்தியா பிரசாரம் தொடங்கும் போதும், காங்கிரசும் கேஜ்ரிவாலும் நாட்டின் சூழலை மோசமாக்க முயற்சிக்கிறார்கள். இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்றுக்கொள்ளக்கூடாது. அதை நாட்டு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
கேள்வி: ஆனால் ஷாஹீன் பாகில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் பங்கேற்கின்றனர். முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்துக்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் அவர்களுடைய மூதாதையர்கள் தான் இந்தியாவைப் பிரித்தார்கள் என்று நீங்கள் கூறி அவர்களை இலக்கு வைக்கிறீர்கள்.
பதில்: அந்த நேரத்தில் அவர்கள் யார் என்று நாங்கள் சொல்கிறோம்… காங்கிரஸின் தலைமை யாரிடம் இருந்தது? பண்டிட் ஜவஹர்லால் நேரு தான் காஷ்மீரின் பிரச்சினையின் வேர்.
கேள்வி: ஆனால், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் முஸ்லிம்களும், நாடு பிளவுபட்டபோது மதத்தின் அடிப்படையில் உருவான நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்த குடும்பங்கள் தானே?
பதில்: அவர்கள் இந்தியாவுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நாட்டிற்கு சாதகமாகவும் இருக்கவில்லை. நாட்டை பிரிவினை செய்து துண்டாடியபோது அதை எதிர்த்திருக்க வேண்டும். இந்தியாவின் நலனை அவர்கள் ஆதரித்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிரானவர்கள் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டும். அதுதான் தேசபக்தி. இது இந்திய குடிமகன் ஒவ்வொரின் பொறுப்பு. யோகியின் உத்தரவின் பேரிலோ, மோதியின் உத்தரவின் பேரிலோ அல்ல, இந்தியாவின் நலனுக்காக இருப்பவற்றை ஆதரிக்கவும், இந்தியாவுக்கு எதிராக இருப்பவர்களை எதிர்க்கவும் வேண்டும். அதை செய்தார்களா?
கேள்வி: ஆனால் யாருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு கூறுகிறதே?
பதில்: இங்கு யாருடைய அதிகாரம் பறிபோகிறது? சுதந்திரம் என்ற முழக்கங்களை எழுப்புகிறார்களே? விடுதலை வேண்டுமாம்... இவர்கள் கேட்கும் விடுதலை அல்லது சுதந்திரம் எதற்கானது?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கேள்வி: சி.ஏ.ஏவை எதிர்ப்பவர்கள் அதை மதத்தின் அடிப்படையில் செயல்படுத்தக்கூடாது என்று தானே கேட்கிறார்கள்?
பதில்: நேரு-லியாகத் ஒப்பந்தத்தை உருவாக்கியது யார்…? மோதி அதை செய்யவில்லை. நேரு இந்தியாவின் பிரதமராகவும், லியாகத் அலி பாகிஸ்தானின் பிரதமராகவும் இருந்தார்கள். 1955 இல் குடியுரிமைச் சட்டத்தை உருவாக்கியது யார்? அப்போது யாருடைய அரசாங்கம் இருந்தது? பாகிஸ்தானில் தங்கியிருந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்கு வரலாம் என்று 1947இல் சொன்னது காந்தி தானே? அதை வரவேற்க வேண்டாமா?
கேள்வி: நீங்கள் சொல்வதன் அடிப்படையில் பேசினால், பர்மாவில் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் இருக்கின்றனர். அங்கு பல இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். பல ரோஹிஞ்சாக்கள் இந்துக்கள். இந்திய அரசாங்கம் அவர்களைப் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?
பதில்: இதோ பாருங்கள், இந்த குடியுரிமைச் சட்டத்தின் பழைய வடிவத்தில் ஒரு வரி மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதில்லை. அங்கு இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

பட மூலாதாரம், MANJUNATH KIRAN
கேள்வி: சிறுபான்மையினர் இடையில் அச்சம் நிலவுகிறதே? பாஜக அரசைக் கொண்டுவந்தால், போராட்டக்காரர்களை அகற்றுவோம் என்று நீங்களும், அமித் ஷாவும் கூறினீர்கள். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இப்போது எதிர்ப்பு தெரிவிப்பதற்கு உரிமையே இல்லையா?
பதில்: ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாதா? எதிர்ப்பு தெரிவிக்கும் வழி ஜனநாயக ரீதியிலானதாக இருக்க வேண்டும். சாலையில் அமர்ந்து மக்களின் வாழ்க்கையையும், போக்குவரத்தையும் சீர்குலைப்பீர்கள், சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்புவீர்கள், இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்புவீர்கள், இது தன் ஜனநாயகமா? சாலையில் போராட்டம் செய்வதற்கான காரணங்களை நீங்கள் கொடுக்க வேண்டும். யாருக்குமே வரம்பற்ற உரிமைகள் இருக்க முடியாது. அரசியலமைப்பிற்கு உட்பட்ட ஜனநாயக உரிமைகள்தான் அனைவருக்கும் உள்ளது. அரசியலமைப்பின் எல்லைக்கு வெளியே அல்ல.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
கேள்வி: ஆனால் நீங்கள் எங்கும் அமர்ந்து நிம்மதியாக ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. முதலமைச்சராவதற்கு முன்பு, நீங்களே மறியல் செய்தீர்களே?
பதில்: நிச்சயமாக போராட்டம் நடத்தலாம். ஆனால் அனுமதியைப் பெற்று போராட்டம் நடத்தலாம். நான் போராட்டம் நடத்தியபோதெல்லாம் முதலில் அனுமதி கோரி விண்ணப்பிப்பேன். அனுமதி கிடைத்த பிறகே போராட்டங்களை செய்துள்ளேன். அனுமதி கொடுக்கப்படாவிட்டால், அதை எதிர்த்திருக்கிறோம். ஆனால் யாராக இருந்தலும் காலவரையறையில்லாமல் சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் செய்ய முடியாது. மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் செயலை செய்வது யாராக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது. தற்போது இவர்கள் குழப்பத்தை பரப்புகிறார்கள் இதில் என்ன நியாயம் இருக்கிறது?
கேள்வி: ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பின்னணியில் போர்வைக்குள் மறைந்துக் கொண்டு, பெண்களை முன் நிறுத்தியுள்ளார்கள் என்று சொல்வது சரியானதா?
பதில்: சி.ஏ.ஏ என்ற பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகளை முன்வைத்து, அவர்கள் போர்வைக்குள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். இதை விட பெரிய கோழைத்தனம் இருக்க முடியாது. அதனால்தான் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டம் என்ற பெயரில் பொது சொத்துக்களை சேதப்படுத்தியவர்களிடம் இருந்தே பணத்தை வசூலிக்கிறேன்.

பட மூலாதாரம், Getty Images
கேள்வி: ஆனால் பொதுச் சொத்து நாசம் செய்யப்படுகிறது என்ற பெயரில் துப்பாக்கிச்சூடு நடத்துவது சரியானதா?
பதில்: அங்கிருந்தவர்கள் ரவுடிகளாக இருந்தனர். அவர்களிடம் சட்டவிரோத பொருட்கள் இருந்தன, பெட்ரோல் குண்டுகள் வைத்திருந்தார்கள். அவர்கள் முன்பே கற்களை சேகரித்து வைத்திருந்தர்கள். திட்டமிட்ட சதித்திட்டத்தின் கீழ் அவர்கள் செயல்பட்டார்கள். பொதுச் சொத்துக்களை எரித்தனர், மக்களைத் தாக்கினார்கள், சட்டத்தை பாதுகாப்பவர்களையே பிணைக் கைதிகளாக்க முயன்றனர்.
கேள்வி: பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்று போராட்டம் நடத்தியவர்களை பார்த்து போலீசாரே சொன்னார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: யார் இதைச் சொல்லியிருந்தாலும் அதற்கு காரணம் இருந்திருக்க வேண்டும். இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினால், வேறு என்ன செய்ய வேண்டும்? பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகள் இந்த முயற்சியை ஏற்க மாட்டார்கள். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதத்தை பரப்புபவர்களுக்கு வார்த்தைகளால் பதிலளித்தால் புரியாது. அவர்களுக்கு துப்பாக்கியின் மொழி தான் புரியும்.
கேள்வி: மோதி பிரதமரானதிலிருந்து, அவருடைய அரசாங்கம் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பிரியாணிக்கு பதிலாக குண்டுகளை பரிசாக கொடுத்தது என்று நீங்கள் அண்மையில் கூறினீர்களே?
பதில்: நான் சரியாகத் தானே சொன்னேன்? நாங்கள் பிரியாணியை கொடுப்பதும் இல்லை, உண்பதும் இல்லை. காங்கிரஸ், கெஜ்ரிவால் போன்றவர்கள் இதைச் செய்வதால் தான் அப்படிச் சொன்னேன். அதனால்தான் பயங்கரவாதிகளுக்கு இனிமேல் பிரியாணி கிடைக்காது, குண்டு தான் கிடைக்கும் என்று சொன்னேன். பயங்கரவாதிகளுக்கு சொன்னதை தயவு செய்து மதத்துடன் தொடர்புபடுத்தாதீர்கள்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
கேள்வி: டெல்லி தேர்தல்களைப் பற்றி பேசலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் நீங்கள் எழுப்பும் அனைத்து தேர்தல் பிரச்சனைகளும் மறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? யோகி வந்து, நேரடியாக தூண்டிவிடும் கருத்துகளைச் சொல்லி அதன் அடிப்படையில் தேர்தல்கள் நடைபெறும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: எனது தேர்தல் அணுகுமுறை பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டது. பள்ளிகளைக் கட்டுவோம், தரமான கல்வியைக் கொடுப்போம் என்று கேஜ்ரிவால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தார். பள்ளிகள் கட்டப்படவில்லை, ஆனால் சாராயக்கடைகள் உருவாக்கப்பட்டன. ஆர்.ஓ தண்ணீர் தருவதாக அவர் கூறினார், ஆனால் நச்சு கலந்த நீரைக் கொடுக்கிறார். பொதுப் போக்குவரத்து முறையை முற்றிலுமாக கேஜ்ரிவால் நாசப்படுத்திவிட்டார். வளர்ச்சி, நல்லாட்சி மற்றும் தேசியவாதம் தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். இந்த பிரச்சனைகளின் அடிப்படையில் தான் பொதுமக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர், இன்றும் கூட இவை தான் நாங்கள் முன்வைக்கும் முக்கிய பிரச்சனைகளாக இருக்கிறது.
கேள்வி: அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மா ஆகியோரின் கருத்துகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
பதில்: அவர்கள் யாருடைய பெயரையும் எடுக்கவில்லை. எந்த சாதி, மதத்தின் பெயரையும் எடுக்கவில்லை. அரசியல் கருத்துகளை எந்தவொரு நிகழ்வுடனும் இணைத்துப் பார்ப்பது சரியானதல்ல.
கேள்வி: நீங்கள் டெல்லியில் பிரசாரம் செய்கிறீர்கள், உங்கள் சொந்த மாநிலத்தில் அரசியல் கொலைகள் நடக்கின்றன. இந்து மகாசபையைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது. பாதி எரிந்த நிலையில் பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன, உங்கள் சொந்த மாநிலத்தின் நிர்வாகத்தில் நீங்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை?
பதில்: எந்த கொலையும் நடைபெறவில்லை. எங்கள் நிர்வாகம் நன்றாகவே நடக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட எல்லா நிகழ்வுகளைப் பற்றிய விஷயங்களிலும் உண்மை என்ன என்பது மிக விரைவில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













