பட்ஜெட் 2020: தந்திரம்தான் இருக்கிறது, பலனில்லை என்கிறார் ராகுல் காந்தி; அமித்ஷா கருத்து என்ன?

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம், The India Today Group/getty Images

இந்தியாவின் அடுத்த நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

News image

இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை குறித்து பலதரப்பட்ட கருத்துகளை அரசியல் தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். அவற்றை இங்கு தொகுத்து அளிக்கிறோம்.

"நீண்ட நேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை; ஆனால்…" - ராகுல் காந்தி

"இது வேண்டுமானால் வரலாற்றிலேயே நீண்டநேரம் வாசிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையாக இருக்கலாம். ஆனால், இது ஒன்றுமே இல்லாத வெற்று நிதிநிலை அறிக்கை. நாடு சந்தித்து வரும் மிகப் பெரிய சவால் வேலைவாய்ப்பின்மை, ஆனால் நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் எந்த கொள்கை ரீதியிலான திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நான் இதில் தந்திரம் மிக்க அறிவிப்புகளை கண்டேனே தவிர நாடு முழுமைக்கும் பலனளிக்கும் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

என்ன சொல்கிறார் அமித் ஷா?

"இந்த நிதிநிலை அறிக்கையில், வரி அமைப்பு முறையை சீர்த்திருத்தம் செய்வதற்கும், அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வங்கி முறையை வலுப்படுத்துவதற்கும், முதலீட்டை ஊக்குவிப்பதற்கும், வணிகத்தை எளிதாக்குவதற்கும் மோதி அரசு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் அரசின் திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

"வழக்கமான கோஷங்கள் மட்டுந்தான்" - சீதாராம் யெச்சூரி

"இது வெறும் வழக்கமான விடயங்களையும், கோஷங்களையும் கொண்ட நிதிநிலை அறிக்கை. மக்களின் துயரங்கள், அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம், கிராமப்புற மக்களின் வருமானத்தில் வீழ்ச்சி, விவசாய தற்கொலைகள் மற்றும் விலைவாசி விலையைத் தணிக்க உரிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"மோசமான மேலாண்மையை மூடி மறைக்கும் நடவடிக்கை" - ஆனந்த் ஷர்மா

"பொருளாதாரத்தை அழிவுப் பாதைக்கு கொண்டு வந்துள்ள இந்த அரசாங்கம், தனது மோசமான மேலாண்மையை மூடி மறைக்கும் வகையில், கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்ட தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு முன்மொழிகிறது" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆனந்த் ஷர்மா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு என்ன?

"வருமான வரி குறைப்பு என்று கூறப்படும் நிதிநிலை அறிக்கையை முழுமையாக படியுங்கள். சமூக பாதுகாப்பு ஏதுமில்லா இந்தியாவில், மக்கள் பணத்தை சேமிப்பதற்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் நீக்கப்பட்டுள்ளன" என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டெரெக் ஓ பிரைன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

"டெல்லி மக்கள் ஏன் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்?"

"இந்த நிதிநிலை அறிக்கைக்காக டெல்லி மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தது. ஆனால், மீண்டுமொருமுறை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டுள்ளோம். பாஜகவின் முன்னுரிமைகளில் ஒன்றாக டெல்லி இல்லாத பட்சத்தில், அந்த கட்சிக்கு ஏன் மக்கள் வாக்களிக்க வேண்டும்? தேர்தலுக்கு முன்பு ஏமாற்றும் பாஜக, தேர்தலுக்கு பிறகு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமா என்ன?" என்று தனது ட்விட்டர் பதிவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

ராஜ்நாத் சிங் கருத்து

"விவசாயம், கல்வி, சுகாதாரம், நீர் மற்றும் திறன் மேம்பாட்டுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப பொருளாதாரத்தில் கொள்கை தலையீடு உண்மையில் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் புதிய இந்தியாவுக்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கும்" என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

"நாட்டின் பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இந்த பட்ஜெட்டின் மூலம் ஏமாற்றம் அடைந்ததே மிச்சம். இது ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இல்லை. இந்த பட்ஜெட் முழுமையாக பணம் முதலாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: