பி.எஸ்.என்.எல்: ஊதியம் இல்லை, விருப்ப ஓய்வு - என்ன ஆனது மினிரத்னா நிறுவனத்திற்கு?

BSNL: ஊதியம் இல்லை, விருப்ப ஓய்வு - என்ன ஆனது மினிரத்னா நிறுவனத்திற்கு?

பட மூலாதாரம், Getty Images

News image

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சென்னை வட்டம் இன்று முதல் 50 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களுடன் இயங்கப் போகிறது.

நாட்டில் முன்னெப்போதுமில்லாத வகையில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவனங்களிலிருந்து 92 ஆயிரம் ஊழியர்கள், நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் விருப்ப ஓய்வு பெற்றனர் என்கின்றன செய்திகள்.

நாடு முழுவதுமுள்ள பிஎஸ்என்எல் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,786. இந்தப் பெரும் விருப்ப ஓய்வுக்குப் பிறகு இவர்களில் 75,217 பேர் மட்டுமே மிச்சமிருப்பார்கள்.

பாதிக்கும் அதிகமானோர், சுமார் 51 சதவிகிதம், பணியிலிருந்து விலகுகின்றனர்.

சென்னை வட்டத்தில் மட்டும் 2,571 பேரும், சென்னை தவிர்த்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் 5,308 பேரும் ஓய்வு பெறுகின்றனர்.

ஒரு காலத்தில் மகரத்னா அந்தஸ்து கேட்டு போராடிய இந்நிறுவனத்துக்கு மினிரத்னா அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், இப்போது ஊதியம் தரக்கூட இயலாமல் தள்ளாடுவது எதனால்?

செல்போன் சேவை தொடங்கப்பட்ட 1.5 முதல் 2 ஆண்டுகளுக்குள் முதலாவது இடத்தைப் பிடித்த இந்த நிறுவனம் இன்று சுமார் ரூ. 20,000 கோடி கடனில் தத்தளிக்கிறது.

இப்படிதான் இயங்க போகிறது பி.எஸ்.என்.எல்

பட மூலாதாரம், Getty Images

இலவச இன்கமிங் மற்றும் இலவச ரோமிங் என கவர்ச்சிகரமான வசதிகளை பி.எஸ்.என்.எல்தான் முதலில் அறிமுகம் செய்தது என்றும், அதனால் கட்டணங்கள் பெருமளவு சரிந்தன என்றும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் நினைவுகூர்கின்றனர்.

இருந்தபோதிலும், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கடன் நிலைமை ``மிகவும் குறைவானது'' என்று அதன் ஊழியர்கள் உறுதியுடன் வாதிடுகின்றனர்.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடிவிட வேண்டும் என்று சிலரும், அதைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று சிலரும் கூறுகின்றனர்.

நிறுவனத்துக்குள் இருக்கும் சவால்கள், நிறுவனத்தின் மீது அரசின் கட்டுப்பாடு மற்றும் அரசின் தலையீடுகள்தான் இப்போதைய நிலைமைக்குக் காரணம் என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறுகின்றனர்.

இப்படியான சூழலில் பி.எஸ்.என்.எல் குறித்து தங்கள் கருத்துகளை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

BSNL: ஊதியம் இல்லை, விருப்ப ஓய்வு - என்ன ஆனது மினிரத்னா நிறுவனத்திற்கு?

பட மூலாதாரம், Getty Images

Presentational grey line

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறும் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,

பி.எஸ்.என்.எல்

பட மூலாதாரம், Facebook

Facebook பதிவை கடந்து செல்ல, 1

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 1

Facebook பதிவை கடந்து செல்ல, 2

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 2

Facebook பதிவை கடந்து செல்ல, 3

தகவல் இல்லை

மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.

Facebook பதிவின் முடிவு, 3

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: