பாஜக தலைவராக ஜே.பி. நட்டா தேர்வு

பட மூலாதாரம், Getty Images
ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக இருந்துவரும் ஜகத் பிரகாஷ் நட்டா (ஜே.பி. நட்டா) அந்தக் கட்சியின் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போதைய தலைவராக உள்ள அமித்ஷாவுக்கு பிறகு அந்தப் பொறுப்புக்கு வரும் நட்டா மூன்றாண்டு காலத்துக்கு அப்பொறுப்பில் இருப்பார்.
படிக்கும்போது தேசிய மாணவர் படையில் சேர்ந்து பணியாற்றிய நட்டா, ஒரு மிமிக்ரி கலைஞரும்கூட.
1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு அவரது அரசியல் வாழ்க்கை பெரிய மாற்றம் வந்தது. 1993ல் எம்.எல்.ஏ. ஆனவர் ஒரே ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனார்.
இரண்டாவது, மூன்றாவது முறை அவர் தொடர்ந்து வென்றிருந்தால் ஹிமாச்சல பிரதேச அரசில் அமைச்சர் ஆகியிருப்பார். ஆனால் அதன் பிறகு அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாநிலங்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இமாச்சலபிரதேச அரசியலில் அவர் பிரேம்குமார் துமால் - சாந்தா குமார் இடையிலான கோஷ்டி அரசியலில் இருந்து அவர் விலகி இருந்தார் என்று கூறப்படுவதுண்டு.
கட்சியின் ஹிமாச்சல பிரதேச மாநிலப் பொறுப்பாளராக நரேந்திர மோதி இருந்தபோது அவருக்கு நெருக்கமாக இருந்தார் நட்டா.
பிற செய்திகள்:
- அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகியது ஏன்? - முதன்முறையாக விளக்கமளித்த இளவரசர் ஹாரி
- சிறையிலிருந்து தப்பி சென்ற கைதிகள்: அதிகாரிகளை திசை திருப்ப மணல் மூட்டைகள்
- தாவூத்துக்கு முன்பே மும்பையை அச்சுறுத்திய கரீம் லாலா பற்றி தெரியுமா?
- அமெரிக்க தேர்தல் 2020: அதிபர் பதவிக்கான போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












