காஷ்மீரில் முடிவுக்கு வந்த தொலைத்தொடர்பு முடக்கம்; செல்பேசி சேவைகள் மீண்டும் தொடக்கம்

பட மூலாதாரம், NurPhoto / getty images
ஜம்மு - காஷ்மீரில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி முதல் முடக்கி வைக்கப்பட்டிருந்த செல்பேசி சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
இனி ப்ரீபெய்டு செல்பேசி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் செயல்படும்.
அத்துடன், இன்று, சனிக்கிழமை முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் குப்வாரா மற்றும் பந்திபோரா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் ஜம்மு பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 2ஜி இணையதள சேவைகளும் தொடங்கியுள்ளன.
இணையதள சேவைகளைப் பயன்படுத்தும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் கருத்து உரிமையில் ஓர் அங்கம் என்றும், காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவுகளை உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று ஜம்மு - காஷ்மீரின் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மாநிலமாக இருந்த ஜம்மு - காஷ்மீர், இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை இந்திய அரசு ரத்து செய்தது முதல் அங்கு இணையதள மற்றும் தொலைபேசி சேவைகள் முடக்கி வைக்கப்பட்டிருந்தன.
பகுதி அளவில் சில இடங்களில் இணையதள மற்றும் தொலைபேசி சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், ஜம்மு பிரதேசம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளின் முடக்கம் தொடர்ந்தது.
இப்போது இணையதள வசதிகள் தவிர்த்த செல்பேசி சேவைகள் ஜம்மு - காஷ்மீர் முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- பெரியார் குறித்த அவதூறான பேச்சு: நடிகர் ரஜினிகாந்த் மீது குவியும் புகார்
- ரஜினிகாந்திற்கு பதிலடி: "முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என்று பொருள்"
- "நிர்பயா குற்றவாளிகளை தூக்குலிட வேண்டாமா? எவ்வளவு தைரியமாக இதை கூறுகிறீர்கள்?"
- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: ராவணன், கொம்பன் மற்றும் ஏ.சி கேரவனில் வந்த காளை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டி












