மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருகிறது: உச்ச நீதிமன்றத்தை நாடும் சிவசேனை

president rule in Maharashtra

பட மூலாதாரம், Getty Images / ani

பாரதிய ஜனதா கட்சி மற்றும் அக்கட்சியுடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட சிவசேனை இடையே முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது குறித்த கருத்து வேறுபாட்டால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவிய மாகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 20 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதால் அந்த மாநிலத்தின் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இன்று பரிந்துரை செய்தார்.

ஆளுநரின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

ஆட்சி அமைக்க தங்களுக்கான காலக்கெடு நீட்டிக்க வேண்டும் என்று கோரி சிவசேனை உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

இன்று மதியம் மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356வது பிரிவின் சரத்துகளை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

தனிப்பெரும் கட்சியான பாஜக, இரண்டாவது அதிக இடங்களைப் பெற்ற சிவசேனை, மூன்றாவது அதிக இடங்களைப் பெற்ற தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் முறையே சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார் ஆளுநர்.

ஆட்சி அமைக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்று பாஜக தெரிவித்துவிட்டது. தங்களுக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதைக் காட்ட ஆளுநர் தங்களுக்கு வழங்கிய காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டதை எதிர்த்து சிவசேனை உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. தங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தேவை என சிவசேனை உச்சநீதி மன்றத்தை அணுகியுள்ளது.

உத்தவ் தாக்ரே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைக்க உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனை முயன்று வரும் சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இன்று இரவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிகிறது. இந்தக் காலக்கெடு முடியும் முன்னரே அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் உத்தவ் தாக்ரே தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியும், சிவசேனைக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக காங்கிரஸ் எந்த உறுதியும் இதுவரை வழங்கவில்லை.

பிரச்சனை எங்கு தொடங்கியது?

மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டமன்றங்களுக்கு நடந்த தேர்தலுக்கான முடிவுகள் அக்டோபர் 24ஆம் தேதி வெளியாகின.

மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கட்சி 105 இடங்களும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனை 56 இடங்களும் பெற்றன.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் பெற்றன.

பாஜக - சிவசேனை கூட்டணி பெரும்பான்மை பெற்றும், முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா 2.5 ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்டதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் எழுந்தது.

இது தேர்தலுக்கு முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்டது என சிவசேனை கூறியது. ஆனால், முதல்வர் பதவியை ஆட்சிக்காலத்தின் சரிபாதி காலத்துக்கு பகிர்ந்து கொள்வது குறித்து முன்னரே பேசவில்லை என பாஜக தெரிவித்தது.

Maharashtra Governor Koshari recommends presidential rule

பட மூலாதாரம், Getty Images

"காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில், எங்களுக்கு ஆட்சி அமைக்கக் கோருவதற்கு உரிமை உள்ளது. ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளோம். குறைந்தது இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டோம். ஆனால், எங்களுக்கு கால அவகாசம் தரப்படவில்லை. ஆட்சி அமைக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வோம்" என்று திங்களன்று சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரேவின் மகனும், சட்டமன்ற உறுபிப்பினருமான ஆதித்ய தாக்ரே தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளை நாடிய சிவசேனை

எதிர்க்கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அதன் காரணம், தாங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசின் ஆதரவுடன் முதல்வரை முன்னிறுத்த முடியும் என்று தனது அதிகாரப்பூர்வ ஏடான 'சாம்னா' இதழில் சிவ சேனை கூறியதுதான்.

வெவ்வேறு சித்தாந்தம் உடைய மூன்று கட்சிகளும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படியான கொள்கைகள் வகுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டது.

ஆட்சியமைக்க தங்கள் ஆதரவு தேவை என்றால் சிவசேனை, பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் சிவசேனையின் அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக வேண்டும் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.

தேவேந்திர பட்னவிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஜக முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நவம்பர் 8 அன்றே ஆளுநரிடம் தனது பதவி விலகல் கடிதத்தை அளித்தார்.

இதனிடையே மத்திய பாஜக தலைமையிலான அரசில் கனரகத் தொழில் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும், மக்களவை சிவசேனைக் குழுத் தலைவரான அரவிந்த் சாவந்த் அமைச்சர் பதவியில் இருந்து நேற்று விலகினார்.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றோடு எங்களுக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், அவை துரோகிகள் அல்ல என்று திங்களன்று தெரிவித்தார் சிவசேனை கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். காஷ்மீரில் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தாங்கள் காங்கிரசுடன் குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒன்றின் கீழ் கைகோர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :