வண்டலூர் அருகே துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலி: வீடியோ கேம் விளையாட்டில் நடந்ததா?

கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

பட மூலாதாரம், Getty Images

சென்னை அருகே உள்ள வண்டலூரில் கல்லூரி மாணவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். வீடியோ கேம் விளையாட்டு தொடர்பில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

வண்டலூருக்கு அருகே உள்ள வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்துவருகிறார். செவ்வாய்க்கிழமையன்று முகேஷ் குமார் தனது நண்பர்கள் விஜய் மற்றும் உதயா ஆகியோருடன் தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். முகேஷும் விஜய்யும் வீட்டின் உள்ளே இருக்க, விஜய்யின் சகோதரரான உதயா, வீட்டிற்கு வெளியே நின்றபடி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீட்டிற்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்ட நிலையில், வீட்டிலிருந்து விஜய் ஓடிவிடவே, உதயா உள்ளே சென்று பார்த்தபோது முகேஷ் குமார் நெற்றியில் துப்பாக்கிக் காயத்துடன் கிடந்துள்ளார். இதையடுத்து உதயா அக்கம்பக்கத்தினரை அழைத்து, முகேஷ் குமாரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

இதற்குப் பிறகு அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி முகேஷ்குமார் உயிரிழந்துள்ளார்.

காவல்துறையினர் உதயாவை விசாரித்துவருகின்றனர். விஜய் தேடப்பட்டு வருகிறார். விஜய் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலை பார்த்துவந்தார். இவருக்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது என்பதை காவல்துறை விசாரித்துவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :