காஷ்மீர் ஸ்ரீநகரில் கையெறி குண்டுத்தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு

ஒருவர் பலி

பட மூலாதாரம், Reuters

இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் 15 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

ஸ்ரீநகரில் உள்ள ஹரி சிங் ஹை என்ற தெருவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி அங்கிருக்கும் பிபிசி செய்தியாளர் மஜித் ஜஹாங்கிர் தெரிவிக்கிறார்.

ஸ்ரீநகரின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஹசீப் முகல், "இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இது குறித்த விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே இடத்தில் நடந்த கையெறி குண்டு தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களாகவே இந்திய நிர்வகிக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கில், பதற்றம் நீடித்து வருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தாண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ரத்து செய்தது.

இந்த முடிவு அக்டோபர் 31ஆம் தேதி அமலுக்கு வந்தது. அப்போதில் இருந்து, போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது.

இன்னும் அங்கும் நிலைமை சீராகவில்லை என்று அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :