தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு - என்ன நடந்தது?

தஞ்சை மாவட்டம் வல்லத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை ஞாயிற்றுக் கிழமையன்று இரவு சாணம் வீசி அவமதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் - வல்லம் சாலையில் அமைந்திருக்கும் பிள்ளையார் பட்டி என்ற ஊரில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சிலையின் மீது ஞாயிற்றுக் கிழமை இரவு யாரோ மாட்டுச் சாணத்தை வீசிச் சென்றிருந்தனர். சிலையின் முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் சாணம் வீசப்பட்டிருந்தது.
இதையடுத்து, இன்று காலையில் அந்தப் பகுதியில் ஒன்று திரண்ட அந்த கிராமத்து மக்கள், திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்திருக்கும் காவல்துறை, சிலையை அவமதித்தவர்களைத் தேடி வருகிறது.
திருவள்ளுவர் உருவத்திற்கு காவி நிறத்தில் உடை அணிவிக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே பெரும் சர்ச்சை நீடித்துவரும் நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








