அபிநந்தனுடன் விமானத்தில் பறந்த விமானப்படை தளபதி தாணு

அபிநந்தன் மீண்டும் விமானம் ஓட்டும் தகுதி பெற்றார்

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் மிக் 21 ரக விமானத்தின் பயிற்சியாளராக தற்போது பணியாற்றி வருவதாகவும், அவர் மீண்டும் விமானங்களை ஓட்டும் அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும் விமானப்படை தலைமை தளபதி பிஎஸ் தாணு தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (திங்கட்கிழமை) பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ விமான தளத்தில் பிஎஸ் தாணு, விங் கமாண்டர் அபிநந்தனுடன் மிக் 21 ரக விமானத்தில் பறந்துள்ளார்.

அபிநந்தன்
படக்குறிப்பு, அபிநந்தன்

இந்த விமானப் பயணம் குறித்து கருத்து தெரிவித்த தாணு, இந்திய விமானப்படையின் பாரம்பரியம் மிக்க மிக் 21 ரக விமானத்தின் கடைசி ஸ்குவாட்ரன் 26 பிரிவுடன் பறந்து சென்றது தனக்கு மகிழ்ச்சியை கொடுத்தாகவும், அபிநந்தன் மீண்டும் தனது பறக்கும் அந்தஸ்தை பெற்றுள்ளதாகவும் கூறினார்.

தான் 1988ஆம் ஆண்டு ஒருமுறை விமானத்திலிருந்து அவசர நிலையில் வெளியேறியதாக குறிப்பிட்ட பிஎஸ் தாணு, 9 மாதங்கள் கழித்துதான் தனக்கு பறக்கும் அந்தஸ்து மீண்டும் கிடைத்ததாகவும், ஆனால் அபிநந்தனுக்கு 6 மாதங்களிலேயே பறக்கும் அந்தஸ்து கிடைத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

தற்போது அபிநந்தன் தலைமைப் பயிற்சியாளராக இருப்பதாகவும் மிக் 21 ரக விமானத்தின் பயிற்சியாளராக அவர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

தனக்கும், அபிநந்தனுக்கும் இரு ஒற்றுமைகள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், அதில் ஒன்று இருவருமே விமானத்திலிருந்து அவசர நிலையில் வெளியேறிய தருணம் என்றார்.

அபிநந்தனின் தந்தையுடன் தான் விமானத்தில் பறந்ததாகவும், தற்போது அபிநந்தனுடன் பறந்ததில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: