இந்திய காவல் துறையின் நிலை: 240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224ல் தொலைபேசி இல்லை

240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224இல் தொலைபேசிகள் இல்லை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி

இந்தியாவில் காவல்துறையில் பணியாற்றுவது எளிதான காரியமல்ல. அதிலும் குறிப்பாக ஒருவர் காவலதுறையில் கீழ்மட்டத்தில் பணிபுரிவது மிகவும் கடினமான ஒன்று.

இந்திய காவல்த்துறை சேவையைப் பற்றியோ, 'ஐ.பி.எஸ்' அதிகாரிகள் பற்றியோ நாம் பேசவில்லை. மாறாக, ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கீழ் பணிபுரியும் பொதுவான போலீஸ்காரர்களைப் பற்றி பேசுகிறோம். அவர்களுக்கு பணி நேரம் நிர்ணயிக்கப்படவில்லை, வார விடுமுறையும் முறைப்படுத்தப்படவில்லை.

இந்தியாவில் 2019இல் போலீசாரின் நிலை என்ற ஒரு அறிக்கையில் இந்த விஷயம் தெளிவாகிறது. மக்கள் நீதி, பொதுநலன் மற்றும் வளர்ந்து வரும் சமூகம் தொடர்பான ஆய்வு எனப்படும் சி.எஸ்.டி.எஸ் அறிக்கையில் இந்த விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் காவல்துறைக்குச் செல்வதற்கு அஞ்சுவதால், பல குற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை என்று இந்த அமைப்பு நடத்திய அண்மை கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

சிறு குழந்தைகள் ஒரு குற்றத்தில் சிக்கினால், அவர்கள் வயது வந்த குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுவார்கள். அதேபோல், பெண்களையும் காவல்துறையினர் அவர்கள் பாணியிலேயே கையால்வதால், வழக்குகள் பதிவு செய்வதற்கு அவர்களும் முன்வருவதில்லை.

இந்த அறிக்கையில் பல அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மன மற்றும் உடல் அழுத்தங்களை எதிர்கொள்வதும் மிகப்பெரிய பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.

காவல்துறையினரின் பணிநேரம் முடிவு செய்யப்படாததால், அவர்கள் எப்போதும் பதற்றத்துடன் இருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

பின்தங்கிய வர்க்கம் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சக பணியாளர்களை, காவல்துறையினர் பாகுபாடாக நடத்துவதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224இல் தொலைபேசிகள் இல்லை

பட மூலாதாரம், Getty Images

இந்த அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்

1- காவல்துறையினரில் 6 சதவிகிதத்தினருக்கு மட்டுமே தங்கள் பதவிக் காலத்தில் ஏதாவது பயிற்சி கொடுக்கப்படுகிறது. மீதமுள்ள காவல்துறையினருக்கு ஆட்சேர்க்கும் சமயத்தில் மட்டுமே பயிற்சி கொடுக்கப்படுகிறது. மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது.

2- நாட்டின் 22 மாநிலங்களில் 70 காவல் நிலையங்களில் வயர்லெஸ் வசதி கிடையாது. 224 காவல்நிலையங்களில் தொலைபேசி கூட இல்லை. தொலைபேசியோ வயர்லெஸோ இல்லாத காவல் நிலையங்களின் எண்ணிக்கை 24.

3- வாகனம் கொடுக்கப்படாத காவல் நிலையங்களின் எண்ணிக்கை சுமார் 240.

'சட்டம் ஒழுங்கு' என்பது மாநில அரசாங்கங்களின் பொறுப்பு என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறையினர் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், போலீஸ்காரர்கள் இதுபோன்ற எந்த விஷயங்களுக்கும் எதிராக குரல் எழுப்பக்கூட முடியாது.

மே 2015 இல், பீகாரில் உள்துறை பாதுகாப்புப் படையின் 53 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில், 2016 ஜூன் மாதத்தில், கர்நாடக காவல்துறையினர் குறைந்தபட்ச சம்பளம், நிலையான பணி நேரம், வார விடுமுறை தேவை என போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், பிருந்தா குரோவர், அருணா ராய் மற்றும் முன்னாள் இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் சிங்.

பட மூலாதாரம், PTI

படக்குறிப்பு, முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், பிருந்தா குரோவர், அருணா ராய் மற்றும் முன்னாள் இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் சிங்.

வாராந்திர விடுமுறை இல்லை

ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, மன அழுத்தத்தினால் காவல்துறையினரின் அணுகுமுறையிலும் தாக்கம் ஏற்படுவதை சுட்டிக் காட்டுகிறது.

டெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் இந்த அறிக்கை முறையாக வெளியிடப்பட்டது, இதில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், உத்தரபிரதேச காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதோடு, சமூக ஆர்வலர்களான பிருந்தா குரோவர், அருணா ராய் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

காவல் துறையை மேம்படுத்தும் விஷயத்தைப் பற்றி பேசும் போது, இதற்காக உச்சநீதிமன்றத்தை அணுகிய பிரகாஷ் சிங் என்பவரின் பெயர் முன் வைக்கப்படுகிறது. 2006 இல் அவரது வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், சீர்திருத்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான முடிவை வழங்கியது.

பிபிசியுடன் பேசிய பிரகாஷ் சிங், இந்தியாவில் காவல்துறை கட்டமைப்பு காலனி ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது என்று கூறினார்.

இருப்பினும், சீர்திருத்தங்கள் தேவை என்று கோருவதும் புதிய விஷயம் அல்ல என்றும் அவர் கூறுகிறார். 1902 ஆம் ஆண்டில், லார்ட் கர்சன் காவல்துறைக்கான சீர்திருத்தங்களையும் வழங்கினார். சட்டத்தை பின்பற்றுவதற்கு பதிலாக, ஆட்சியாளர்களின் கட்டளைகளை பின்பற்றுவதில் காவல்துறையினர் நம்பிக்கைக் கொள்வதாக அவர் கருதுகிறார்.

சி.எஸ்.டி.எஸ் மற்றும் 'காமன் காஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், காவல்துறையினர் வாராந்திர விடுப்பு பெறும் ஒரே மாநிலம் மகாராஷ்டிரா என்று கூறப்பட்டுள்ளது.

ஒடிசா மற்றும் சத்தீஸ்கரின் 90 சதவீத காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறை கிடைப்பதில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் ஆய்வு மேற்கொண்டவர்களிடம் தெரிவித்தனர்.

240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224இல் தொலைபேசிகள் இல்லை

பட மூலாதாரம், AYUSH DESHPANDE

எந்த முன்னேற்றமும் இல்லை

இந்தியாவில் தொடர்ந்து 14 மணி நேரம் வேலை செய்ய ஒரு போலீஸ்காரர் நிர்பந்திக்கப்படுகிறார், அதே நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஒடிசாவில், போலீஸ்காரர்கள் 17 முதல் 18 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வதாக கூறியுள்ளனர்.

இதில், மூத்த போலீஸ் அதிகாரிகளின் வீட்டு வேலைகளை பார்க்க வேண்டியிருக்கிறது என்பது போன்ற குறைகளும் இந்த ஆய்வின் போது வெளிவந்துள்ளது.

குற்றங்கள் தொடர்பான ஆய்வு மற்றும் பயிற்சியைப் பொருத்தவரை, இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

ராஜஸ்தான், ஒடிசா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களை 'மிக மோசமாக செயல்படும் மாநிலங்கள்' என்று அறிக்கை அடையாளம் கண்டுள்ளது.

மேற்கு வங்கம், குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் காவல்துறைகள் நாட்டிலேயே சிறப்பாக செயல்படுகின்றன. இங்கு, சிறந்த கட்டமைப்பு, போதுமான வசதிகள் உள்ளன என்பதும் நவீனமயமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

பிரகாஷ் சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, அவ்வப்போது போலீஸ் சீர்திருத்தங்கள் குறித்த குழுக்கள் மற்றும் கமிஷன்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

தேசிய போலீஸ் கமிஷன், மாநில போலீஸ் கமிஷன், போலீஸ் பயிற்சி இவற்றுக்காக, கோரே கமிட்டி, ரிபேரோ கமிட்டி, பத்மநாபையா கமிட்டி மற்றும் மாலிமத் கமிட்டி உட்பட பல கமிட்டிகளை அரசு அமைத்திருந்தது.

ஆனால் இவை அனைத்திற்கு பிறகும், காவல்துறையில் சீர்திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

'ஒரு போலீஸ்காரர் பல விஷயங்களைச் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நபரைப் பாதுகாக்கும் பொறுப்புடன், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளைக் கையாள்வதும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால் என்று நீதிபதி செல்லமேஸ்வர் கூறுகிறார்.

240 காவல் நிலையங்களுக்கு வாகனங்கள் இல்லை, 224இல் தொலைபேசிகள் இல்லை

பட மூலாதாரம், Getty Images

காவல்துறையிலும் பாகுபாடு

முறையாக பயிற்சி இல்லாத நிலையில், நீதிமன்றத்தில் ஒரு வழக்கை எவ்வாறு முன்வைப்பது என்பதோ எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்வது எப்படி என்பதோகூட காவல்துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

பொருளாதாரக் குற்றம், தரவுத் திருட்டு மற்றும் இணையக் குற்றம் போன்ற மாறிவரும் குற்ற முறைகளைக் கையாளும் திறன் இந்திய காவல்துறைக்கு போதுமான அளவு இல்லை என்ற கவலையையும் இந்த அறிக்கை எழுப்பியுள்ளது.

காவல்துறைக்கு வழங்கப்பட்ட வசதிகள் மற்றும் நவீனமயமாக்கல் விஷயத்தில் கூட, இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

ஆனால் போதுமான ஆட்கள் இல்லாதது தான் மிகப்பெரிய சவால் என்று குறிப்பிடும் இந்த அறிக்கை, பல மாநிலங்களில் காலியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறது.

ஐ.நா சபையின் கூற்றுப்படி, ஒரு லட்சம் மக்களுக்கு 222 போலீசார் இருக்க வேண்டும், இந்தியாவில் அதன் விகிதம் ஒரு லட்சம் நபர்களுக்கு 192 என்ற அளவிலேயே இருக்கிறது.

நாகாலாந்து தவிர, மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் காவல்துறையில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது, இதில் உத்தரபிரதேசத்தின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

பின்தங்கிய மற்றும் மிகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள பதவிகளைப் பற்றியும் அறிக்கை கூறுகிறது. இதேபோல், சிறுபான்மையினரின் விகிதமும் காவல் துறையில் மிகவும் குறைவு.

'இந்தியாவில் காவல்துறையின் நிலை 2019' அதாவது 'எஸ்.ஐ.பி.ஆர்' அறிக்கையில், சாதாரண குடிமக்களின் மனதில் காவல்துறை மீது மிக அதிக அளவில் அச்சம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: