காஷ்மீர் மசோதா: “ஜனநாயகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம்” - மோதி

பட மூலாதாரம், Hindustan Times
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும், அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றும் மசோதாவும் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேறியதை, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவை நிறைவு பெற்ற பின்னர், “நாம் ஒன்றாக இருக்கின்றோம், ஒன்றாக 130 கோடி இந்திர்களின் கனவை நிறைவேற்றுவோம்” என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்த அவர், “ஜம்மு காஷ்மீர் தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் அதிக ஆதரவோடு நிறைவேறியது நாடாளுமன்ற வரலாற்றில் நினைவுகூரத்தக்க தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்க மசோதா தாக்கல் செய்தார். அங்கு அந்த மசோதா வெற்றி பெற்றதை அடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இருப்பதால் இங்கே மசோதாவை நிறைவேற்றுவதற்கு எந்த தடையும் இருக்காது என்று தெரிகிறது. மக்களவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதற்கு அடுத்தது குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டவுடன், மசோதா சட்டமாகிவிடும். அதன் மூலம் சிறப்புரிமை பெற்ற காஷ்மீர் மாநிலம் இரண்டு அதிகாரம் குறைந்த யூனியன் பிரதேசங்களாகிவிடும்.
7.00: காஷ்மீர் சட்டப்பிரிவு 370 மற்றும் 35A மசோதா மக்களவையிலும் நிறைவேறியுள்ளது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 367 பேரும், எதிராக 67 பேரும் வாக்களித்துள்ளனர்.
இதன்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிகிறது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றமுள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிகிறது.
6.30: அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு, ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கவில்லை. தனியாக இருக்க செய்கிறது. சரியான நேரம் வரும்போது, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று காஷ்மீர் மறுசீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES
பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீருக்காக அமித் ஷா ஜவஹருலால் நேருவை குற்றஞ்சாட்டினார்.
அரசியல் சாசனப் பிரிவு 371-யில் தலையிட வேண்டும் என்பது நரேந்திர மோதி அரசின் எண்ணமல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைக்கு போதிய கலந்தாய்வு செய்யப்படவில்லை என்ற எதிர்ப்புக்கு பதிலளிக்கையில், மூன்று தலைமுறைகளாக நடைபெற்ற கலந்தாய்வில், எந்த பயனும் ஏற்படவில்லை. எனவே, நிலைமை மாற வேண்டுமென்றால், சில கடுமையான நடவடிக்கைகள் தேவை” என்று அமித் ஷா தெரிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிர் ஆதித்தியா சிந்தியா வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
5.25: காஷ்மீர் பற்றிய நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரை ஆற்றினார்,
"பிரச்சனை இப்போது தீவிரமாகியுள்ளது. விடுதலை இயக்கத்தை அவர்கள் இன்னும் அதிகமாக ஒடுக்குவார்கள். காஷ்மீர் மக்களை மனிதர்களை போல சமமாக அவர்கள் கருதவில்லை. காஷ்மீர் மக்களை நசுக்குவார்கள். புல்வாமா மாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடைபெற இது வழிவகுக்கும்" என்று அவர் கூறினார்.
“திப்பு சுல்தான் வழியில் கடைசி துளி ரத்தம் இருக்கும் வரை போராடுவோம். ஆனால், இந்த போரில் யாரும் வெற்றிபெறமாட்டார்கள். இது அணு ஆயுத மிரட்டல் அல்ல. நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையோடு இருங்கள். மோசமான சம்பவங்களை எதிர்பாருங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
“சர்வதேச சமூகத்திற்கு அறைகூவல் விடுக்கிறேன். இப்போது அவர்கள் எதுவும் செய்யவில்லை என்றால், தீவிர பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” என்று பேசிய இம்ரான் கான், எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளாத பாரதிய ஜனதா கட்சியை நாஜி கட்சியோடு ஒப்பிட்டு பேசியுள்ளார்.
“இந்த கருத்தியல் காந்தியை கொன்றது. வளரும் உலகம் தனக்கான சட்டங்களை கடைபிடிக்க முடியவில்லை என்றால் நாம் அதற்கு பொறுப்பாக முடியாது” என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஐக்கிய நாடுள் அவை வழியாக சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல எண்ணி வருகிறோம். ஐக்கிய நாடுகள் அவையிலும் இந்த பிரச்சனையை எழுப்புவோம் என்றும், முஸ்லிம் உலகின் அனைத்து குரல்களையும் காஷ்மீர் கொண்டுள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.

பட மூலாதாரம், Hindustan Times/Getty Images
16.55: “என்னை வீட்டுச்சிறையில் வைக்கவில்லை. எனது விரும்பத்தின் பேரில் நான் வீட்டில் இருந்தேன் என்று உள்துறை அமைச்சகம் தெரிவிப்பது பொய்‘ என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
ஃபரூக் அப்துல்லா நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என்றால், அவரை துப்பாக்கிமுனையில் கொண்டுவர முடியாது என்று அமித் ஷா கூறியது குறிப்பிடத்தக்கது.
16.45: காஷ்மீர் மறுசீர்திருத்த மசோதாவை ஆதரித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பேசினார். ஜெயலலிதாவின் விருப்பத்தை இந்த மசோதா நிறைவேறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததை மீண்டும் தமிழ் நாட்டுக்கு கிடைக்க செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்தார்.

பட மூலாதாரம், Anadolu Agency
16:00: காஷ்மீரின் நிலை குறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமை அதிகாரி ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா தலைமையில் கார்ப்ஸ் கமாண்டர்ஸ் கூட்டம் பாகிஸ்தானில் நடைபெற்றது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை நிராகரிக்கும் பாகிஸ்தான் அரசின் வாதத்தை முழுமையாக ஆதரிப்பதாகவும், 10 ஆண்டுகளுக்குமுன்பே சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ மூலம் காஷ்மீரில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை சட்டபூர்வமாக்க இந்தியா மேற்கொண்டிருந்த சில நேர்மையற்ற முயற்சிகளை பாகிஸ்தான் அங்கீகரிக்கவில்லை என்றும் கார்ப்ஸ் கமாண்டர்ஸ் கூட்டத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரிகளின் போராட்டத்துக்கு இறுதிவரை பாகிஸ்தான் ராணுவம் உறுதியோடு இருக்கும் என்றும், அதற்காக எந்தவொரு நிலைக்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் ஜெனரல் கமார் ஜாவேத் பஜ்வா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
14.15: மக்களவை உறுப்பினர் பிராலஹட் ஜோஷி, " நாடு கொண்டாட்டத்திலுள்ள போது, காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானின் குரலை எதிரொலிக்கிறது. பாகிஸ்தான் அரசின் அறிக்கை இதை கருப்பு நாள் என்றது, காங்கிரஸின் சில தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் கருப்பு நாள் என்றே உள்ளது, நீங்கள் அவர்களோடு இணைகிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
14.00: ஐக்கிய ஜனதாதள கட்சியினர் மக்களவையிலிருந்து வெளிநடப்பு
"இந்த மசோதாவிற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம்": மம்தா பானர்ஜி
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
13.39:"ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி ஆகியோர் எங்குள்ளார்கள் என்ற எந்த தகவலும் என்னிடம் இல்லை. இதனால், நான் அரசிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், அவர்கள் தனிமையில் விடப்படக்கூடாது. அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் விடுவிக்கப்படவேண்டும்." என்று கூறியுள்ளார். உங்களுக்கு காஷ்மீர் விவகாரத்தில் நிரந்தர தீர்வு வேண்டுமென்றால், இதில் தொடர்புடைய அனைவரிடமும் பேச வேண்டும், என்றும் கூறியுள்ளார்.
13.21: காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுவதற்காக கூட்டப்பட்ட பாகிஸ்தானின் நாடாளுமன்ற கூட்டத்தில், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கலந்துகொள்ளாததால் அமளி. நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் முன்பே, சபாநாயகர் தனது அறைக்கு எழுந்து சென்றுவிட்டார்.
13.11: உத்தம்பூர் மக்களவை உறுப்பினரான ஜித்தேந்திர சிங், "ஸ்ரீநகரில் வாழக்கூடிய சாதாரண குடிமகன், 370 நீக்கம் குறித்து மகிழ்ச்சியிலேயே உள்ளார். எங்களின் அடுத்த இலக்கு என்பது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதே." என்று தெரிவித்துள்ளார்.
"மக்களால் ஆனதே தேசம், நிலத்தால் ஆனது அல்ல"
12.53: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைப்பதன் மூலமாகவோ, மக்களால் தேர்வுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை சிறையில் அடைப்பதன் மூலமாகவோ, நாட்டின் ஒற்றுமையில் முன்னேற்றம் காணப்படவில்லை. மக்களால் உருவானதே தேசம், நிலத்தால் ஆனது அல்ல. இந்த பதவி துஷ்பிரயோகத்தால், நாட்டின் பாதுகாப்பில் மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படும். என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 5
12.46: திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் வெளிநடப்பு
12.36: முதுகெலும்புள்ள மக்களுக்கே மக்களவை உள்ளது. முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு இது பொருந்தாது என்று டி.ஆர்.பாலு பேசியபோது, அதிமுக மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் எழுந்து கேள்வி எழுப்பியதால் விவாதம் ஏற்பட்டது.
12.32: பாகிஸ்தானிய அதிகாரிகளை வந்து இறந்தவர்களின் உடலை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறது இந்திய அரசு. தினமும் உள்ள பாதுகாப்பு பிரச்னைகள் இன்னும் சரியாகவில்லை. எல்லையிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இல்லை. தீவிரவாதிகளை தடுக்க என்ன வழி உள்ளது? பாதுகாப்பை உறுதிசெய்ய என்ன வழி?" என்று கேள்வி எழுப்பினார் திமுகவின் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு.

பட மூலாதாரம், ANI
12.02: " மக்களவை உறுப்பினர் ஃபருக் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முன்னறிவிப்பு அவைக்கு அளிக்கவில்லை" என்று தயாநிதி மாறன் தெரிவித்தார்.
11.59: மக்களவையில் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம்
11.49: மக்களவை உறுப்பினர் மனீஷ் திவாரி பேசுகையில், "ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா என இரு மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, அம்மாநிலத்தின் சட்டமன்றத்தில் இதுகுறித்து ஆலோசனை கேட்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் இவ்வாறு ஆலோசனை கேட்கப்படவில்லை." என்று தெரிவித்தார்.
11.30 "ஜம்மு - காஷ்மீர் மீது சட்டம் இயற்ற, நாடாளுமன்றத்திற்கு உரிமைகள் உள்ளன" என்று தெரிவித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

பட மூலாதாரம், ANI
11.27: மக்களவையில் பேசிய அமித்ஷா, "ஜம்மு மற்றும் காஷ்மீர் என்பது இந்தியாவின் முக்கிய பகுதியாகும். இது அரசியல் ரீதியான நகர்வு அல்ல. ஒவ்வொரு முறையும் நான் ஜம்மு மற்றும் காஷ்மீர் என்று கூறும்போதும், இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும் அடங்கும். காஷ்மீருக்காக நான் உயிரையும் கொடுப்பேன்" என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு " ஒமர் அப்துல்லா மற்றும் முஃப்தி ஆகியோர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை." என தெரிவித்தார்.
மக்களவை கூடியது
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












