ஜெய்பால் ரெட்டி: அவசர நிலையை எதிர்த்த முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர் மரணம்

பட மூலாதாரம், ANI
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜெய்பால் ரெட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 77.
1942-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மகபூப்நகர் மாவட்டத்தில் பிறந்த ஜெய்பால் ரெட்டி, இளம் வயதிலேயே அரசியலுக்கு ஈர்க்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், 1977-இல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதை தீவிரமாக எதிர்த்தார்.
அதனை தொடர்ந்து அவர் ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1980 நாடாளுமன்ற தேர்தலில் அவர் மேடக் தொகுதியில் இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1985 முதல் 1988 வரை ஜெய்பால் ரெட்டி ஜனதா கட்சியின் பொது செயலாளராக இருந்தார். 5 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஜெய்பால் ரெட்டி இரண்டு முறை மாநிலங்களைவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மேலும் ஆந்திர சட்டமன்றத்திலும் அவர் நான்கு முறைகள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தபோது, ஜெய்பால் ரெட்டி மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றார்.
1999-ஆம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெய்பால் ரெட்டி, 2004-இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அவர் மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் தகவல்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார்.
ஜெய்பால் ரெட்டி இறந்ததையடுத்து, அவரது பணிகளை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டிய காங்கிரஸ் கட்சி அவரது மறைவுக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- இந்தியாவின் பரிந்துரையில் உயர் விருது பெற்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்
- கறுப்பின வழக்கறிஞரை இன ரீதியாக தாக்கி பேசிய டிரம்ப்புக்கு வலுக்கும் கண்டனம்
- பிரிட்டனில் இருந்து கழிவுப்பொருள்களை இலங்கையில் இறக்குமதி செய்தது யார்?
- குழந்தையின் ஆண்குறியை கிள்ளிய சீனரை நியூசிலாந்து விடுதலை செய்தது ஏன்?
- சென்னையில் தண்ணீர் கிடைக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












