கர்நாடக அரசியல் சிக்கல் தீவிரம்: அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் விலக முடிவு

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மஜத கூட்டணியைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் பாஜக-வின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் சனிக்கிழமை பதவி விலகல் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் அமைச்சர் பதவி வகித்த சுயேச்சை எம்.எல்.ஏ. ஹெச்.நாகேஷ் தமது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து கடிதம் கொடுத்துள்ளார்.
அத்துடன் தாம் பாஜக-வை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட சிக்கல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு அமைச்சர் பதவி தருவதை சாத்தியமாக்கும் வகையில் அனைத்து காங்கிரஸ் அமைச்சர்களும் பதவி விலக முடிவெடுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
12 எம்.எல்.ஏ.க்களின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 211 ஆக சுருங்கும். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. தமது ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், அவையில் அரசின் பலம் 104 ஆக மாறும். ஆனால், எண்ணிக்கை வலு குறைந்த சட்டப் பேரவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 106 ஆக இருக்கும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








