சஞ்சீவ் பட்: ஐஐடி கல்வி முதல் மோதி எதிர்ப்பு வரை - யார் இவர்?

சஞ்சீவ் பட்: ஐஐடி கல்வி முதல் மோதி எதிர்ப்பு வரை - யார் இவர்?

பட மூலாதாரம், Getty Images

குஜராத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட்டுக்கு, முப்பது ஆண்டு கால வழக்கொன்றில் ஆயுள் தண்டனை வழங்கி ஜாம் நகர் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் கூடுதலாக 11 பேரை சாட்சியங்களை எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிய சஞ்சீவ் பட்டின் மனுவை கடந்த வாரம் நீதிமன்றம் நிராகரித்தது.

உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்த சஞ்சீவ் பட், இந்த வழக்கில் நியாயமான ஒரு முடிவுக்கு வர இந்த 11 சாட்சியங்களின் விசாரணை மிக முக்கியம் என தெரிவித்திருந்தார்.

சரி யார் இந்த சஞ்சீவ் பட்? அவர் குறித்த சில தகவல்கள்,

  • ஐஐடியில் பட்ட மேற்படிப்பு படித்த சஞ்சீவ் பட் 1988ல் குஜராத் கேடர் காவல்துறை அதிகாரியாக ஆனாக். குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை செய்திருக்கிறார்.
  • 1999 முதல் 2002 வரை மாநில உளவுத்துறையில் அதிகாரியாக இருந்தார்.
  • அந்த நேரத்தில் எல்லை பாதுகாப்பு, கடல் பாதுகாப்பு மற்றும் முக்கியஸ்தர்களின் பாதுகாப்பு என அனைத்தும் இவரது கட்டுபாட்டின்கீழ் இருந்தது.
  • 2002ல் குஜராத் கலவரத்தின் போது சஞ்சீவ் பதவியில் இருந்தார். இதன்பிறகு 2002ல் குஜராத் கலவரத்தில் இப்போதைய பிரதமர் நரேந்திர மோதியின் பங்கை குறித்து கேள்வி எழுப்பினார்.
சஞ்சீவ் பட்: ஐஐடி கல்வி முதல் மோதி எதிர்ப்பு வரை - யார் இவர்?

பட மூலாதாரம், Getty Images

  • 2011ஆம் ஆண்டு பிரதமர் ஒரு கூட்டத்தில் இந்துகளுக்கு கோபத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கூறியதாக பிரதமருக்கு எதிராக எழுத்து வாக்குமூலம் அளித்தார்.ஆனால் மோதி அரசாங்கம் அவர் அந்த கூட்டத்தில் இருந்ததையே மறுத்துவிட்டது.
  • 2011 ல் அவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கும் சொல்லாமல் விடுப்பு எடுத்ததற்கும் அவரை பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
  • பிறகு 2018ல் மீண்டும் போதை பொருள் வழக்கில் 1998ம் ஆண்டில் ஒரு வழக்கறிஞர் மீது பொய் வழக்கு போட்டதாக கைது செய்யப்பட்டார்.
  • அந்த சமயத்தில் 8 வழக்கு இதேபோல் இருந்தது. அதில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இவர் பொய் குற்றம் சுமத்தி பணம் கேட்டதாக இவர் மேல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதிக்கு எதிரான கருத்துகளை சமூக ஊடகத்தில் பகிர்ந்து வந்தார். இவர் கடந்த 8 மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :