ஜஸ்டின் ட்ரூடோ பூர்வகுடி மக்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்டது ஏன்? மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், O.B. BUELL/LIBRARY AND ARCHIVES CANADA
பூர்வகுடி மக்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர்
ராஜதுரோக குற்ற வழக்கில் 1885ம் ஆண்டு கனடா அரசால் தண்டனை விதிக்கப்பட்ட பூர்வகுடி மக்கள் தலைவரிடம் மன்னிப்பு கேட்டார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.

பட மூலாதாரம், Getty Images
க்ரீ தலைவரான பவுண்ட்மேக்கர் அரசுக்கு எதிராக புரட்சி செய்ததாக தவறான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால், இப்போது அவர் அமைதியின் தூதுவராகவே நினைவு கூரப்படுகிறார். அவர் மரணித்து நூறாண்டு ஆன பின்னரும், அவருக்கு ஆதரவாக கனடாவில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஒரு நீண்ட பிரசார போராட்டத்திற்கு பின், பூர்வகுடி தலைவரான பவுண்ட்மேக்கரை குற்றமற்றவரென அறிவித்துள்ளது கனடா அரசு.

ஜெகன்மோகன் ரெட்டி: துன்ப சுழல்களை மீறி முதல்வராகும் தலைவர்

பட மூலாதாரம், Getty Images
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெருகிறது. மக்களவைத் தேர்தலிலும் ஆந்திர மாநிலத்தில் இந்தக் கட்சி நிறைய இடங்களை வெல்கிறது. தோல்வியை ஒப்புக்கொண்டு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலகிவிட்டார்.
முதல் முறையாக மாநில முதல்வராக உள்ளார் ஜெகன்மோகன்.
2009-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மட்டும் இறந்திருக்காவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில அரசியலில் முக்கிய பங்காற்றுபவராக வந்திருக்க முடியாது.

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்

பட மூலாதாரம், THAMIZHACHI THANGAPANDIYAN
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் தீர்மானமாக வெற்றி தோல்வி நிலவரத்தைக் காட்டுகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுதியான வெற்றியைப் பதிவு செய்யும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் இரவு 10.30 மணி நிலவரப்படி 15 தொகுதிகளுக்கு வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒன்பதில் திமுகவும், மூன்றில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் வென்றுள்ளனர்
ஒட்டுமொத்தமாக 38 மக்களவை தொகுதிகளில் அதிமுக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. திமுக கூட்டணி 13-ல் வெற்றியும் 24-ல் முன்னிலையிலும் உள்ளது.

மக்களவைத் தேர்தல் 2019: பா.ஜ.க முன்னிலை - எப்படி சாத்தியமானது இந்த வெற்றி?

பட மூலாதாரம், Getty Images
பா.ஜ.கவின் இந்த வெற்றியானது இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரிகளை கவலைக் கொள்ள செய்துள்ளது.
காஷ்மீர் பள்ளதாக்கிலிருந்து செய்தி தரும் பிபிசி செய்தியாளர் ஆமிர், "இரண்டாவது முறையாக வெற்றி பெறுள்ள பா.ஜ.க, காஷ்மீர் விவகாரத்தில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று காஷ்மீர் மக்கள் அஞ்சுகின்றனர்" என்கிறார்.

'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட தோல்வி' - டிகேஎஸ் இளங்கோவன்

பட மூலாதாரம், Twitter
இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும், தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்தும் திமுக மூத்த தலைவர்களின் ஒருவரான டிகேஎஸ். இளங்கோவன் பிபிசிக்கு அளித்த ஃபேஸ்புக் நேரலையின் முக்கிய பகுதிகள் இங்கே.
தமிழகத்தில் திமுக கூட்டணி பல இடங்களில் வெற்றிபெற்றாலும், அகில இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளதே?
தமிழகத்தில் இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வெற்றியடைந்துள்ளது. அகில இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், எதிர்க் கட்சிகளின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட தோல்வியோ என்ற ஐயம் இப்போது எழுகிறது. திமுகவை பொறுத்தவரை தமிழக மக்கள் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.
விரிவாக படிக்க:'இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் ஏற்பட்ட தோல்வி'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












