ஜெகன்மோகன் ரெட்டி: துன்ப சுழல்களை மீறி ஆந்திரப் பிரதேச முதல்வர் பதவிக்கு உயரும் தலைவர்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பரணி பரத்வாஜ்
- பதவி, மூத்த பத்திரிகையாளர்
ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெருகிறது. மக்களவைத் தேர்தலிலும் ஆந்திர மாநிலத்தில் இந்தக் கட்சி நிறைய இடங்களை வெல்கிறது. தோல்வியை ஒப்புக்கொண்டு தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி விலகிவிட்டார்.
முதல் முறையாக மாநில முதல்வராக உள்ளார் ஜெகன்மோகன்.
2009-ம் ஆண்டு நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வருமான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மட்டும் இறந்திருக்காவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநில அரசியலில் முக்கிய பங்காற்றுபவராக வந்திருக்க முடியாது.
2009ம் ஆண்டு கடப்பா மக்களவைத் தொகுதி உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதுவரை இவரது தந்தை உயிரோடு இருந்திருந்தால், அவர் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்து, இப்போது மக்களவைக்கு மூன்றாவது முறையாக போட்டியிட்டிருப்பார்.
மத்திய அமைச்சராக உருவாகியிருக்கலாம். அரசியலில் வித்தியாசமான பாதையை எடுக்கிற புதிய தலைவர்களுக்கு இவர் பிரதிநிதியாக உருவாகியிருக்கிறார்.

பட மூலாதாரம், YSJAGAN/FACEBOOK
இதுவரை அதிகாரத்தில் இருக்காததால் அவரது நிர்வாக திறமை பற்றி பேச முடியாமல் உள்ளது.
விடாமுயற்சியோடு உழைத்தால் எதையும் சாதித்து விடலாம் என்று நம்புவோருக்கு இவர் தலைவராக தோன்றுகிறார்.
கஷ்டங்களையும், இழப்புகளையும் கிரகித்துக் கொள்ளும் அணுகுமுறையோடு முன்னேறி, யாரையும் எதிர்த்து நிற்கும் சக்தியுடைய தலைமை பண்பு இவரிடம் உள்ளது.
அரசியலில் பிரவேசித்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியில் இழுபறி நிலையில் இருந்த தலைவர்களோடு சிக்குண்டு, வழக்குகளில் மாட்டிக்கொண்டு, 16 மாதங்கள் சிறையில் கழித்த அனைத்து அனுபவங்களும் ஜெகன் மோகன் ரெட்டியின் தீர்க்கமான உறுதியை பலவீனப்படுத்தவில்லை.

பட மூலாதாரம், YSJAGAN/FACEBOOK
ஜெகன் மோகன் ரெட்டி 1972ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி கடப்பா மாவட்டத்தின் புலிவன்துலாவில் பிறந்தார்.
புலிவன்துலாவில் சிறிதுகாலம் கல்வி பயின்ற அவர், பின்னர் ஹைதராபாத் பப்ளிக் பள்ளியில் இணைந்து கற்க தொடங்கினார்.
வணிகவியலில் இவர் பட்டம் பெற்றுள்ளார். இவரது தங்கை ஷர்மிளாவும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஜெகன் ஒரு சீர்திருத்த சபை (புரொடஸ்டண்ட்) கிறிஸ்தவராவார்.
2009ம் ஆண்டு 15வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இவரது அரசியல் பயணம் தொடங்கியது.

இவரது குடும்பம் நீண்டகாலமாக அரசியலில் ஈடுபட்டு வந்த குடும்பமாகும். முதலில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது தந்தை ராஜசேகர் ரெட்டியின் கேரமான இறப்பால், அவருக்கு மிகவும் விசுவாசமானவாகள் சிலர் தற்கொலை செய்து கொண்டனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட எல்லா குடும்பங்களையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென ஜெகன் நினைத்தார், இதற்காக மாநிலம் முழுவதும் ஆறுதல் பயணத்தை அவர் தொடங்கினார்,
இந்த பயணத்தைக் கைவிட வேண்டுமென காங்கிரஸ் மேலிடம் அவருக்கு உத்தரவிட்டது. ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத ஜெகன், அந்த ஆறுதல் பயணத்தை தொடர்ந்தார்.

பட மூலாதாரம், YSRCP
இது தன்னுடைய தனிப்பட்ட விவகாரம் என்று அவர் உறுதிபட தெரிவித்துவிட்டார்,
2010ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டு, 45 நாட்களுக்குள் புதியதொரு கட்சியை நிறுவப்போவதாக ஜெகன் அறிவித்தார்.
2011ம் ஆண்டு மார்ச் மாதம் 'யுவஜன ஸ்ராமிக் ராய்து காங்கிரஸ் கட்சி' என்று பொருள்படும் வகையில் தனது புதிய கட்சியை 'ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி' என கிழக்கு கோதாவரியில் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார்,
இதனை தொடர்ந்து கடப்பா தொகுதியில் இருந்து ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிட்டு, 5 லட்சத்து 45 ஆயிரத்து 43 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்,

பட மூலாதாரம், YSRCP
ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன.
சிறை தண்டனையும் அவர் அனுபவிக்க வேண்டியிருந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆந்திர பிரதேச மாநிலத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்தது.
சிறையில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி இந்த முடிவை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார்.
125 மணிநேர உண்ணாவிரதத்திற்கு பின்னர், ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நிலைகள் ஆபத்தான அளவுக்கு குறைந்துவிட்டன.
எனவே, உஸ்மானியா மருத்துவமனைக்கு அரசு அவரை மாற்றியது.

பட மூலாதாரம், YSRCP
அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகனின் தாய் விஜயம்மாவும் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானா மாநிலம் உருவாக்குவதை எதிர்த்து 72 மணிநேர பந்த் நடத்த அழைப்புவிடுத்தார்.
ஜெகனும், அவரது தாய் விஜயம்மாவும் தங்களின் அரசியல் பொறுப்புகளை ராஜினாமா செய்தனர்.
2014ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இவரது கட்சி தோல்வியை சந்தித்தது.

பட மூலாதாரம், FACEBOOK/YSRCP
மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் மட்டுமே வென்று, எதிர்க்கட்சி தலைவர் என்ற பெறுப்பில் திருப்தி அடைய வேண்டியிருந்தது.
இந்த சக்தியோடு, "மக்கள் தீர்மான பயணத்தை" 2017ம் ஆண்டு நவம்பர் 6ம் தொடங்கி ஆந்திர பிரதேசத்தின் 3,648 கிலோமீட்டர் மேற்கொண்டார்.
13 மாவட்டங்களில், 125 சட்டமன்ற தொகுதிகளில் 430 நாட்கள் நடைபெற்ற இந்த பயணம், 2019ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி நிறைவடைந்தது.
"ஜெகனை நாங்கள் விரும்புகிறோம், ஜெகன் வர வேண்டும்" என்ற முழக்கமே இந்த பயணத்தின்போது எதிரொலித்தது.

பட மூலாதாரம், FACEBOOK/JAGAN
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் மிகப் பெரிய பயணமாக அமைந்த இது, எதிர்கட்சி தலைவராக ஆந்திர பிரதேசத்தில் மக்கள் இடையில் ஜெகனுக்கு இருக்கும் ஈர்ப்புமிக்க தலைமை பண்பை காட்டியது.
காங்கிரஸில் இருந்து கொண்டு, மத்திய அமைச்சராக உருவாகும் வாய்ப்பை ஜெகன் மறுத்துவிட்டார். சரியான நேரத்தில் மாநில முதலமைச்சராக மாறும் வாய்ப்பையும் நிராகரித்துவிட்டார்.
உறுதியாக செயல்பட்ட ஜெகன் மோகன் ரெட்டி, வழக்குகளை சந்திக்க தயங்கவில்லை. இந்தகைய அணுகுமுறை தற்போதைய அரசியல்வாதிகளிடம் காணப்படுவது மிகவும் அரிது.
கட்சியை நிறுவிய குறுகிய காலத்திலேயே தேர்தல்களை சந்தித்தாலும், 1.5 சதவீத வாக்குகள் என்ற சிறிய வித்தியாசத்தில் வெற்றியை இழத்தல், சட்டமன்ற உறுப்பினர்கள் (23 பேர்), மக்களவை உறுப்பினர்கள் (3 பேர்) கட்சியில் இருந்து வெளியேறுவதை தாங்கி கொள்ளுதல், கட்சியின் தொண்டர்களுக்கு தலைமை பண்பை வழங்குதல், அவர்களின் நம்பிக்கையை பெறுதல் போன்றவை ஜெகன் மோகன் ரெட்டியின் தனிச் சிறப்புமிக்கப்பட்ட அடையாளங்களாகும்.

பட மூலாதாரம், YSJAGAN
கட்சியின் உறுப்பினர்கள் கட்சி தாவுவதால் கோபங்கொண்ட ஜெகன், அதற்கு சிறந்த கட்டுப்பாட்டை விதித்தார்.
இன்னொரு கட்சியின் உதவியோடு யாராவது வெற்றி பெற்றுவிட்டு, ஜெகனின் கட்சியில் சேர விரும்பினால், அவர் வெற்றி பெற்ற பதவியை துறந்துவிட்டு, தனது கட்சியில் சேர வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்திருந்தார்.
ஜெகன் இந்த கொள்கையை மிகவும் ஒழுங்காக கடைபிடித்து வருகிறார்.

பட மூலாதாரம், FACEBOOK/JAGANMOHANREDDYYS
தேசிய அளவில் எல்லா அரசியல் கட்சிக்கும் இந்த கொள்கை மிகவும் முக்கியமானதாகும்.
ஜெகன் மோகன் ரெட்டியின் இளம் வயதை வைத்து பார்த்தால், அரசியலில் அவர் இன்னும் வெகுதொலைவு பயணம் மேற்கொள்ள வேண்டிய தலைவராக இருக்கிறார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












