விவிபேட் ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு: எதிர்கட்சிகளின் மனு நிராகரிப்பு

பட மூலாதாரம், Getty Images
50 சதவீத மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விவிபேட் (VVPAT) சீட்டுக்களை சரிபார்க்க வேண்டும் என்று 21 எதிர்க்கட்சிகள் கோரியதற்கு அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய விடுத்த மனுவை இன்று (செவ்வாய்க்கிழமை) உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
50 சதவீத விவிபேட் (VVPAT) சீட்டுக்களை சரிபார்க்க வேண்டுமென காங்கிரஸ், தெலுகு தேசம் மற்றும் திமுக உள்ளிட்ட 21 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
பரவலாக தெரிவு செய்யப்படும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் விவிபேட் (VVPAT) எனப்படும் வோட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் டிரேல் இயந்திரத்தின் சீட்டுகளை சரிபார்ப்பதற்கு, பதிலாக 5 இயந்திரங்களின் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை செவ்வாய்கிழமை விசாரித்தபோது, எத்தனை வாக்குப்பதிவு எந்திரங்களின் VVPAT சீட்டுகளை எண்ண வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எதிர்கட்சிகளுக்கு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஏ. எம். சின்கவியிடம் கேட்டார்.

பட மூலாதாரம், Getty Images
50 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட வேண்டும். ஆனால், குறைந்த பட்சம் 33 சதவீதம் அல்லது 25 சதவீதமாவது எண்ணப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விவிபேட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் எண்ணிக்கையை வேண்டுமானால் அதிகரிக்கலாம். ஆனால் 50 சதவீதம் என்பதை ஏற்க முடியாது. இது வாக்கு எண்ணிக்கையில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று நீதிபதிகள் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் 21 எதிர்க்கட்சிகள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்த நிலையில், இன்றைய விசாரணையின்போது,அவர் உச்ச நீதிமன்றம் வந்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்திந்த அவர், தேர்தல் நடைமுறையில் வெளிப்படைதன்மை வேண்டுமென்ற நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்ததாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிகளை திருத்தியமைக்க தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் வைக்கப்போவதாக அவர் கூறினார்.
மாலை 6 மணி அளவில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், "நாங்கள் வெளிப்படைதன்மைக்காக போராடி வருகிறோம். நியாயமக தேர்தல் நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை. ஆனால், பாரதிய ஜனதா கட்சி எங்கள் நியாயமான கோரிக்கைக்கு எதிராக நிற்கிறது" என்றனர்.
தேர்வு செய்யப்படும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் அல்லது விவிபாட்-டில் ஏதாவது ஒன்றில் முரண்பாடு காணப்பட்டாலும், சட்டப்பேரவையின் எல்லா வாக்குச்சாவடிகளின் இயந்திரங்களிலும் விவிபாட் ஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்க வேண்டும் என்று கோரப்போவதாக சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.
VVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













