You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேனி மக்களவை தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரவீந்திரநாத் குமார்
தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் சுமார் 5 லட்சம் வாக்குகளை பெற்று எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசை சேர்ந்த இ.வி.கே.எஸ். இளங்கோவனை 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 12.28% வாக்குகளுடன் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்.
2019-ஆம் ஆண்டு தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள்
ரவீந்திரநாத் குமார் - அதிமுக
ஈவிகேஎஸ் இளங்கோவன் - திமுக
தங்க தமிழ்செல்வன் - அமமுக
ராதாகிருஷ்ணன் - மக்கள் நீதி மய்யம்
சாகுல் அமீது - நாம் தமிழர்
2009-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமல் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் தேனி மாவட்டத்தில் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தேனி மக்களவைத் தொகுதி புதிதாக உருவானது.
முன்னர் இருந்த பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் தேனி , பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் , போடிநாயக்கனூர் மற்றும் சேடப்பட்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
இந்நிலையில் தற்போதுள்ள தேனி மக்களவை தொகுதியில் சோழவந்தான், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம் , போடிநாயக்கனூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
தேனி மக்களவை தொகுதி இது வரை
2009-ஆம் ஆண்டு இத்தொகுதி சந்தித்த முதல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜே.எம். ஆருண் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட தங்கத்தமிழ்செல்வன் அவருக்கு அடுத்த நிலையில் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
2014-ஆம் ஆனது நடந்த தேர்தலில் அதிமுகவின் பார்த்திபன் வெற்றி பெற்றார். இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில் திமுக கூட்டணியில் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் சார்பாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
பசுமையாக காணப்படும் தேனி தொகுதி அதிக அளவில் கிராமப்புறங்களையும், சிறு நகரங்களையும் கொண்டது. விவசாயம் இங்கு பிரதான தொழிலாக உள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கிய நிலையில் அதற்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்தனர்.
இதற்கு எதிராக மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டப் பணிகளை தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்படுத்தக்கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓபிஎஸ் ஆகிய 3 முதல்வர்கள் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது இத்தொகுதிக்கு உள்ள ஒரு தனி அம்சமாகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்