மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், ANI
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலை 7.30 மணிக்கு ரயில்வே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் 36 பேர் காயமடைந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் அபூர்வா பிரபு, ரஞ்சனா டாம்பே மற்றும் சிராஜ் கான் ஆகியோரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் இடிபாடுகள் முழுவதும் அகற்றப்படாத நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
விபத்தில் காயமடைந்தவர்கள் செயிண்ட் ஜார்ஜ், ஜிடி மற்றும் சியான் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், ANI
இந்த விபத்து நடந்தவுடன் உடனடியாக நிவாரணப்பணிகள் தொடங்கின. தற்போது அந்த பகுதியில் போலீசாரின் வாகனங்களும், வாகனங்களும் மட்டுமே காணப்படுகின்றன.
தினமும் அதிகம் பேர் வந்து செல்லும் இந்த சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறுவதும், உள்வருவதுமாக பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இந்தளவு முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வே நடைமேம்பாலத்தின் பாதுகாப்பு குறித்து ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளது.
பிற செய்திகள்:
- பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: நடந்தது என்ன?
- அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்புக்கு போட்டியாக களமிறங்கும் பேட்ரோ இவ்ரோக்
- விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்
- மசூத் அஸாரை ஐநா கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மீண்டும் முட்டுக்கட்டை போடும் சீனா
- வட இந்தியப் பெண்களை அவமதித்தாரா ராகுல்? உண்மை என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












