''இந்திய தாக்குதலில் 292 பேர் இறந்துவிட்டார்கள்; ஆதாரம் இதுதான்'' வைரலான போலி செய்தி

பட மூலாதாரம், Twitter
- எழுதியவர், உண்மை பரிசோதிக்கும் குழு
- பதவி, பிபிசி

கூறப்படுவது என்ன?
இந்தியாவின் பாலக்கோட் விமான தாக்குதலில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
எங்கே பகிரப்பட்டது? - வாட்ஸ் அப் மற்றும் ட்விட்டர்
கூற்று உண்மையா பொய்யா? - பொய்

ஒரு வாட்ஸ் அப் அரட்டையில் இந்தியாவின் பாலகோட் விமான தாக்குதலில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பதிவொன்று இந்தியாவில் வைரலாக பரவியது.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயிற்சி முகாம்களை குறிவைத்து இந்தியா விமான தாக்குதலை நடத்தியது.
வாட்ஸ் அப் சாட் ஒன்றில் ஒரு இந்தியருக்கும் அவரது பாகிஸ்தான் நண்பர் எனக்கூறப்படும் மருத்துவர் லிஜாசுக்கும் உரையாடல் நடந்ததாக கூறப்படும் ஸ்க்ரீன்ஷாட் வைரலாக பரவியது.
அதில் பாலகோட்டின் மருத்துவ பல்கலைகழகத்தைச் சேந்த ஒரு மருத்துவர் விமான தாக்குதல் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் இருந்தாகவும், மேலும் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்துவது போன்றும் அந்த வாட்ஸ் அப் சாட்டின் ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளது.
அந்த ஸ்க்ரீன்ஷாட்டில் உள்ளதென்ன?
முதல் நபர் - என்னது இது? இந்தியாவின் விமான தாக்குதல் உண்மையா அல்லது ஊடகங்களால் பொய் சொல்லப்படுகிறதா?
மற்றொரு நபர் - இந்திய விமான படை பாலக்கோட்டில் நுழைந்தது. ஆனால் கட்டுப்பாட்டு எல்லைகோடு பகுதியை தாண்டுவது தவறானது.
முதல் நபர் - ஆம். 12 விமானங்கள் நுழைந்துள்ளன. ஆனால் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தாக்கினால் இந்தியா உரிய பதிலடி கொடுக்கும். உங்களுக்கு எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் எனத் தெரியுமா?
மற்றொரு நபர் - உள்ளூர் மக்கள் யாரும் கொல்லப்படவில்லை. தீவிரவாதிகள் தான் கொல்லப்பட்டனர். அவர்கள் எங்களுக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

பட மூலாதாரம், Twitter
அந்த அரட்டை இவ்வாறு நீள்கிறது. இந்த ஸ்கிரீன் ஷான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டது.
இந்த அரட்டை குறித்த ஸ்க்ரீன்ஷாட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உள்ளிட்டவை கூறப்பட்டுள்ளன. இதில் கூறப்பட்டுள்ள எண்ணிக்கை இந்திய ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத தகவலை கூறியதை கிட்டத்தட்ட ஒத்திருக்கின்றன.
இருப்பினும், இந்திய விமான படை தலைவர் பி எஸ் தானோயா கூறுகையில், ''எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை எண்ணிக்கொண்டிருப்பது விமான படையின் வேலையல்ல'' என்றார்.

பட மூலாதாரம், Twitter
இந்திய அரசு இதுவரை எத்தனை பேர் இறந்தார்கள் என்பது குறித்து ஒரு அறிக்கையையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

பட மூலாதாரம், Twitter
இந்த வாட்ஸ் அப் செய்தி உண்மையா பொய்யா?
இந்த வாட்ஸ் அப் செய்தியில் பாலக்கோட்டில் 292 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வாட்ஸ் அப்பில் அரட்டையில் ஈடுபட்ட நபரின் தாய் பாலக்கோட் மருத்துவ பல்கலைகழகத்தின் தலைவராக இருப்பதாக இந்த ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள மோதியின் ஆதரவாளர் எனக் கூறிக்கொள்ளும் சேகர் சாஹல் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
இதிலிருந்து இது போலி செய்தி என்பது தெரியவருகிறது. பாகிஸ்தானின் பாலகோட்டில் எந்த மருத்துவப் பல்கலைக்கழகமும் இல்லை.
பாலக்கோட் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மனெஷ்ரா மாவட்டத்தில் குன்ஹார் நதிக்கரையில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் பிரபல சுற்றுலா தளமாக விளங்கும் இப்பகுதி இஸ்லாமாபாத்தில் இருந்து தோராயமாக 160 கி.மீ தொலைவில் உள்ளது.
பாகிஸ்தானின் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் வெளியிட்டுள்ள தகவலின்படி பாலகோட்டில் உள்ள மக்களுக்கு அருகே இருக்கக்கூடிய அரசு மருத்துவ கல்லூரி அபோட்டாபாத்தில்தான் அமைந்திருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிபிசிக்கு செய்தி வழங்கும் உள்ளூர் செய்தியாளர் மிர்சா அவுரங்செப் ஜர்ரால்தான் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மக்களிடம் பேசிய முதல் நபராவர். பாலக்கோட்டில் எந்த மருத்துவப் பல்கலைகழகமும் இல்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
''பாலக்கோட்டில் எந்த மருத்துவ பல்கலைகழகமும் இல்லை. அடிப்படை சுகாதார மையம் மட்டுமே இருக்கிறது. அங்கே ஒரு மருத்துவரும் மிகக்குறைவான மற்ற பணியாளர்களும் உள்ளனர். நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிக்கும் வசதி கூட இல்லை. இந்திய விமானப்படை தாக்குதலுக்கு பிறகு மனெஷ்ரா மாவட்டத்தின் பாலக்கோட் மற்றும் கர்ஹி ஹபிபுல்லாவிலுள்ள அடிப்படை சுகாதார மையத்துக்கு நாங்கள் சென்றோம். ஆனால் காயமடைந்த ஆள்கள் யாரையும் பார்க்கவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து அரை மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில் இந்த மையம் உள்ளது'' என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












