"பாகிஸ்தான் பரப்பும் போலிச் செய்திகளை நம்பாதீர்கள்" - நரேந்திர மோதி

பட மூலாதாரம், Hindustan Times
"நம்மை பிரித்து ஆளுகின்ற சூழ்ச்சியை பாகிஸ்தான் செய்கிறது. பாகிஸ்தான் பரப்பிவிடும் போலி செய்திகளை நீங்கள் நம்ப வேண்டாம். இந்தியா தொடர்ந்து போராடும். இந்திய படைகள் மீது உங்கள் நம்பிக்கையை வையுங்கள்" என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் வீடியோ கான்பரன்சிங் வழியாக பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒவ்வொரு பூத்திலும், ஒவ்வொரு பாஜக பணியாளரும் பத்து வாக்காளர்களை கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் மோதி பேசினார்.
மேலும், இந்தியா ஒன்றாக உழைத்து, ஒன்றாக வளர்ந்து. ஒன்றாக போராடி வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.
புதிய இந்தியாவை உருவாக்க புது முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோதி தெரிவித்தார். "நம் எதிரிகிள் நம்மை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். நம் வளர்ச்சியை தடுக்க நினைக்கிறார்கள். அவர்களை எதிர்த்து நாம் நிற்கிறோம்" என்றார்.
இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் திரும்பி வர வேண்டும் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்க, நம் பிரதமரால் சில நிமிடங்கள் கூட பிரச்சாரத்தை நிறுத்த முடியவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்தியாவில் போர் பதற்றம் உள்ள சூழலில் நம் நாட்டிற்கு நிலையான தலைமை வேண்டும். தேசிய பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய நிலையில், பாஜக பணியாளர்களுடன் உரையாற்றுகிறார் மோதி என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பிரதமர் மோதியை விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்