விமானத்தில் வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி - அதிர்ந்த அதிகாரிகள்

பட மூலாதாரம், Getty Images
தாய்லாந்திலிருந்து சென்னை வந்த பயணியின் பையில் சிறுத்தை குட்டி இருந்ததை அடுத்து சுங்க அதிகாரிகளால் அவர் தடுக்கப்பட்டார்.
அவரது பையில் பிறந்து ஒரு மாதமே ஆன சிறுத்தை குட்டி இருந்தது.
வழக்கமாக அவரை சோதனை செய்யும் போது, அவரது பையிலிருந்து வித்தியாசமான ஒலி வருவதை அதிகாரிகள் கேட்டனர்.
இதனை அடுத்து அவரது பையை சோதனையிட்டபோது அதில் ஒரு கிலோ எடை உள்ள சிறுத்தை குட்டி இருந்தது.
இவர் பாங்காக்கிலிருந்து சனிக்கிழமை இரவு சென்னை வந்திருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கடத்தல்காரர்களுக்கும் இவருக்கும் தொடர்புள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகளின் கேள்விகளுக்கு நாற்பத்தி ஐந்து வயதான அந்த நபர் மழுப்பலான பதில்களை கூறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்த சிறுத்தை குட்டி பலவீனமாக இருப்பதாகவும், அச்சத்தில் கத்துவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
அக்குட்டிக்கு அதிகாரிகள் புட்டியில் பால் ஊட்டுவது போன்ற காட்சிகள் விமான நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன.
மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அந்த சிறுத்தை விடப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












