பட்ஜெட் 2019: நிதியமைச்சர் பியூஷ் கோயல் உரையின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Hindustan Times
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதிலாக பியூஷ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதுதான்.
வருமான வரி சலுகைகள்:
- ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை.
- மாத ஊதியம் பெறுபவர்களுக்கான ஸ்டாண்டார்டு டிடக்ஷன் 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
முதலீடுகளுக்கான வரி விலக்குகள்:
- வருங்கால வைப்பு நிதி, முதலீடுகள், குறிப்பிட்ட சேமிப்புகள் உள்ளவர்கள் நடைமுறையில் 6.5 லட்சம் வருமானம் வரையில்கூட வருமான வரி செலுத்தவேண்டியிருக்காது.
- இதைவிடவும் கூடுதல் வருமானம் உள்ளவர்கள், வீட்டுக்கடன், கல்விக் கடன் ஆகியவற்றை செலுத்தினால் அவர்களும் குறிப்பிட்ட அளவு வரை வரிசெலுத்தும் நிலை ஏற்படாது.
மற்ற சலுகைகள்:
- வரிமான வரி கணக்கு தாக்கல் 24 மணி நேரத்துக்குள் பரீசலிக்கப்பட்டு பணம் உடனடியாக அளிக்கப்படும்.
- வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கான சலுகைகள்:
- இரண்டு ஹெக்டேருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் புதிய திட்டம் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
- "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டத்தின் மூலம் இந்த தொகை 3 தவணையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதனால் 12 கோடி விவசாயிகள் பயனடைவர்.
- வரயிருக்கும் நிதியாண்டில் விவசாயிகளின் இந்த உதவி திட்டத்திற்கு ரூ. 75 ஆயிரம் கோடி நிதி முன்மொழியப்பட்டுள்ளது.
- விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தீவிர இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்டு, தேசிய பேரிடர் மேலாண்மை நிதி பெற்ற விவசாயிகளுக்கு, வட்டியில் 2 சதவீத மானியம், மற்றும் சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட கடன் செலுத்தும் காலம் முழுவதற்கும் 3% ஊக்கத் தொகை வழங்கப்படும்.

பட மூலாதாரம், DAVID TALUKDAR
மீன்வளத்துறை அமைக்க முடிவு:
- மீன்வளங்கள் மீது தனி கவனம் செலுத்துவதற்காக மீன்வளத்துறை என்ற தனி துறையை அமைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
- இதன் மூலமாக மீன்வளத்தை சார்ந்துள்ள 1.45 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த திட்டம்.
நெடுஞ்சாலை வசதி:
- ஒரு நாளைக்கு 27 ஆயிரம் கிலோ மீட்டர் நெஞ்சாலைகள் அமைத்து, சாலை வசதி கட்டுமானத்தில் முன்னோடியாக இந்தியா விளங்கி வருகிறது.
- உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வட கிழக்கு மாநிலங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு:
- கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவது உயர்ந்துள்ளது.
- பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன.
ரயில்வே துறை ஒதுக்கீடு:
- ரயில்வே துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த துறையில் முதலீடும் அதிகரித்துள்ளது.
- விபத்துக்களை குறைப்பதில் இந்த ஆண்டு ரயில்வே துறை வெற்றி கண்டுள்ளது.
- அகல ரயில்வே பாதைகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், PIB
மருத்துவ துறை:
- 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஹரியாணாவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 10 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர்.
- அத்தியாவசிய மருந்துகள், கார்டியாக் ஸ்டென்டுகள் ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இலவச எரிவாயு திட்டம்:
"உஜ்வாலா" யோஜனாவின் கீழ் ஓராண்டுக்குள் கிராம புறங்களில் 8 கோடி எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்.
ஒருங்கிணைக்கப்படாத தொழில் பிரிவினருக்கு புதிய ஓய்வூதிய திட்டம்
- ஒருங்கிணைக்கப்படாத தொழில்துறையில் புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- 60 வயதில் ஓய்வு பெற்ற பின்னர், தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 3000 வழங்கப்படும். இதனால் 10 கோடி தொழிலாளர்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இதற்கு 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வயதுக்கு தக்கப்படி ஒவ்வொருவருக்கும் அரசு ரூ. 50 முதல் ரூ. 100 வழங்கவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












