'திருநங்கைகளுக்கு அனுதாபம் தேவையில்லை' - அப்சரா ரெட்டி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அப்சரா ரெட்டி உடனான பிபிசி தமிழின் சிறப்பு நேர்காணல்.
அதிமுகவிலிருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தது ஏன் என அவரிடம் பிபிசி தமிழ் செய்தியாளர் கிருத்திகா கேட்டபோது, "அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் என்ற முறையில், நான் குழந்தைகளின் பாதுகாப்பு, உரிமை ஆகிய விஷயங்களில் பணியாற்றி வந்தேன். அப்போதுதான் அம்மாவின் மரணம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கட்சியில் பல்வேறு பிரச்சனைகளும், குழப்பங்களும் எழுந்தன. அதிலிருந்து எல்லாம் ஓதுங்கி இருந்தபோதுதான், காங்கிரஸ் மகளிர் அணி தலைவியான சுஷ்மிதா தேவ் என்னை சந்தித்து காங்கிரசில் இணையுமாறு கேட்டுக்கொண்டார்."
தற்போதைய தமிழக அரசு குறித்து கேட்டபோது, "தற்போதுள்ள அரசு மக்கள் விரோத அரசு. இவர்கள் நரேந்திர மோதி கூறுவதற்கெல்லாம் தலையாட்டுகிறார்கள். இவர்கள் வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துவிட்டது." என்றார்.
கடைசியாக திருநங்கைகள் மசோதா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், திருநங்கைகள் மசோதாவை நான் எதிர்க்கிறேன். எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை. சம உரிமைகள் தேவை. கல்வி, வேலைவாய்ப்பு, சமூகத்தில் சமமான உரிமைகள் தேவை. அதைக்கொடுக்காமல் இந்த மசோதா எப்படி எங்களுக்கான சாதகமாக அமையும் என்று பதிலளிக்கிறார்.
இந்த நேர்காணலின் முழுமையான காணொளியை காண, கீழே உள்ள யூடியூப் இணைப்பைப் பாருங்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :








