ராஜஸ்தான் மாளிகையில் நடந்த ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்

பட மூலாதாரம், Instagram/priyankachopra
நிக் ஜோனஸ் மற்றும் ப்ரியங்கா சோப்ராவின் திருமணம் கிறித்துவ முறைப்படி ராஜஸ்தானில் உள்ள மாளிகையில் நடைபெற்றது.
பிரபல பாலிவுட் நடிகையான ப்ரியங்கா மற்றும் டெக்சாஸை சேர்ந்த பாடகரான நிக் ஜோனஸ் இருவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் மாளிகையில் திருமணம் செய்து கொண்டனர்.
ஜோனஸின் தந்தை பால் கெவின் ஜோனஸ், திருமணத்தை அதிகாரப்பூர்வமாக நடத்தி வைத்தார். ஞாயிற்றுக்கிழமையன்று இந்து பாராம்பரிய முறைப்படி விழா நடைபெறும்.

பட மூலாதாரம், Reuters
அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் திருமண புகைப்படங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.
தங்கள் உறவின் சிறப்பம்சங்களில் ஒன்று, "இரு குடும்பத்தினரும், அவர்களது நம்பிக்கைகளும் கலாசாரங்களும் ஒன்றாக இணைந்தது," என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், இரு தரப்பையும் மனதில் வைத்து திருமணத்திற்கு திட்டமிட்டது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் மற்றும் பாடகர்
26 வயதான ஜோனசும், 36 வயதாகும் ப்ரியங்கா சோப்ராவும் மே 2017ஆம் ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டனர். அடுத்த ஒரே ஆண்டில் லன்டனில் அவர்களின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
Instagram பதிவின் முடிவு
2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா, இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட்டின் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
2016ஆம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 மனிதர்களில் ப்ரியங்காவின் பெயர் இடம் பெற்றிருந்தது. மேலும், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கடந்த ஆண்டின் உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இவர் பெயர் இடம்பெற்றது.
பின்னர் ஹாலிவுட்டில் நடிக்கச் சென்ற ப்ரியங்கா, க்வான்டிகோ தொடரால் மேலும் பிரபலமடைந்தார். வென்டிலேட்டர், பே வாட்ச் போன்ற ஆங்கிலத் திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
நிக் ஜோனஸ் அமெரிக்காவின் பிரபலமான பாடகராவார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












