'இச்சையைத் தூண்டும் வகையில்' ஆடை அணிந்ததாக எகிப்திய நடிகை மீது வழக்கு

பட மூலாதாரம், EPA
கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
எகிப்து நடிகை மீது வழக்கு
கெய்ரோ திரைப்பட விழாவில் தமது தொடைகள் தெரியும்படி ஆடை அணிந்த, 44 வயதாகும் திரைப்பட நடிகை ராணியா யூசஃப் என்பவர் மீது, ''இச்சையைத் தூண்டும் வகையில்'' ஆடை அணிந்தததாக அந்நாட்டு வழக்கறிஞர்கள் இருவர் வழக்கு தொடுத்துள்ளனர்.
"இத்தகைய சர்ச்சை கிளம்பும் எனத் தெரிந்திருந்தால், நான் அந்த ஆடையை அணிந்திருக்க மாட்டேன்," என்று மன்னிப்பு கோரியுள்ள ராணியா கூறியுள்ளார்.
அவர் விரும்பும் ஆடையை அணிய வேண்டுமென அவருக்கு ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.

மெக்சிகோவின் புதிய அதிபர்

பட மூலாதாரம், Reuters
மெக்சிகோவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள இடதுசாரித் தலைவர் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடோர் , அந்நாட்டில் ஊழலை ஒழிக்கவும், போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
மெக்சிகோவில் 2018ஆம் ஆண்டில் மட்டும் 29,000 கொலைகள் நடந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் விற்கும் கும்பல்களுக்கு இடையேயான மோதல்களால் நிகழ்ந்தவை.

'நாடுகடத்துங்கள்'

பட மூலாதாரம், Getty Images
சௌதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் கொலை செய்யப்பட்டதில் சந்தேகிக்கப்படும் நபர்களை நாடுகடத்த வேண்டும் என துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.
சௌதி அரசு 11 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்திருந்ததாலும் அவர்களை துருக்கிக்கு நாடு கடத்தும் திட்டம் எதுவும் இல்லை.

ஜி20: அமெரிக்கா - சீனா பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்தித்து சுமார் இரண்டரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே வணிகப்போர் நடந்துவரும் நிலையில், அவர்கள் நடத்தும் முதல் பேச்சுவார்த்தை இதுவே.
அர்ஜெண்டினாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாடு சனிக்கிழமையன்று முடிந்த பிறகு, இரவு உணவுக்கு சந்தித்த இருவரும் நடத்திய பேச்சுவார்த்தை "மிகவும் சிறப்பாக" சென்றதாக அதிபர் டிரம்பின் ஆலோசகர் லேரி குட்லோ தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












