You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலையில் பெண்கள்: ”மாற்றம் ஒன்றே மாறாதது”
சபரிமலை கோயிலில் எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தற்போது கோயில் நடை திறக்கப்படுகிறது.
மாதவிலக்கு என்பது தீட்டு, அந்த நேரத்தில் கோயிலுக்கு போகக்கூடாது என்ற மனத் தடை பெண்கள் மத்தியில் மாறியுள்ளதா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கே.
விஸ்வநாதன் சாம்பசிவம், "சபரிமலையில் மட்டும் அல்ல, மாதவிடாய் காலத்தில் எந்த கோயிலுக்கும் பெண்கள் செல்லக் கூடாது, இது இந்தியப் கலாசாரம். அதை மீறக் கூடாது" என ஃபேஸ்புக்கில் தன் கருத்தை தெரிவித்திருக்கிறார்.
"இது வேண்டாத மக்களை குறிப்பாக கேரளத்தில் குழப்ப பாஜக செய்யும் மலிவான அரசியல். விருப்பப் பட்ட பெண்கள் போகட்டும். விருப்பம் இல்லாதவர்கள் போக வேண்டாம். மற்ற கோயில்களில் எப்படி பின் பற்றுகிறார்கள். இதற்கு பெண்களே பலியானதுதான் வருத்தத்திற்குரிய விஷயம். பினராயி விஜயன் கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டும். இந்த பேரணியிலும் ஐயப்பன் பேரைச் சொல்லிக் கொண்டு விளக்கேற்றி கொண்டுதானே வருகிறார்கள்" என்கிறார் சுப்புலக்ஷ்மி.
"மாற்றம் ஒன்றே மாறாதது, என்றாலும் இதை ஒத்துக்கொள்ள இன்னும் காலம் எடுக்கும் என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஒருநாள் நிச்சயம் எல்லோரும் ஒத்துக்கொள்ளுவார்கள்." என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியன்.
பிற செய்திகள்:
- #MeeToo விவகாரம் - இலங்கையில் சர்ச்சைக்குள்ளான பாரதிராஜாவின் பேச்சு
- 'சர்வம் டாலர்மயம்' - உலகெங்கும் கொடிகட்டி பறக்கும் உடலுறுப்பு கடத்தல்
- ஜமால் கசோஜி: மாயமானதன் பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
- ‘காதலனை ஏவி கணவன் கொலை’ - சமூக ஊடகம் என்ன நினைக்கிறது?
- “இயற்கை இவ்வளவு அழகா?” - வியப்பில் ஆழ்த்தும் அட்டகாச புகைப்படங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்