பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது பா.ஜ.க அமைச்சர் அவதூறு வழக்கு

பட மூலாதாரம், Getty Images
தன் மீது பாலியல் குற்றஞ்சாட்டிய பெண் மீது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
தற்போதைய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என #MeToo ஹாஷ்டாகின் கீழ் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டு ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் #MeToo ஓர் இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
பெண்களை 'சந்திப்பு' என்ற பேரில் விடுதிகளுக்கு அழைத்தது உட்பட மோசமான நடத்தை குற்றச்சாட்டு அக்பர் மீது எழுந்துள்ளது.
தன் மீது குற்றம் சுமத்திய மற்றொரு பெண் மீது நஷ்ட ஈடு கோரப்போவதாகவும் அக்பர் அச்சுறுத்தியுள்ளார்.
அக்பர் மீது குற்றம் சுமத்திய ஷுதாபா பால் இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "இதுகுறித்து நான் யோசித்து வருகிறேன். உண்மையும் நீதியும் நிச்சயம் வெல்லும். நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்."
"புகார் கூறிய எங்களை அவமரியாதை செய்வதே அக்பர் தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதற்கு ஒரு உதாரணம்.”
"எங்களது போராட்டம் அனைத்து பெண்களுக்குமானது; நீதிக்கானது, அன்றாட வாழ்க்கையில் பணியிடங்களில் நடக்கின்ற வன்முறைக்கு எதிரானது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் உள்நோக்கம்
தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அக்பர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

அரசு சுற்றுப்பயணமாக வெளிநாடு சென்று இருந்ததால் இது குறித்து உடனே கருத்து கூற முடியாமல் போனதாக அவர் கூறி உள்ளார்.
அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது சமூகத்தின் சில பிரிவினர் இடையே சாதாரணமாகிவிட்டதென அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வரும் சூழலில் இந்த மாதிரி குற்றச்சாட்டுகள் எழுப்ப காரணமென்ன என்று கேள்வி எழுப்பி உள்ள அக்பர், என் மரியாதைக்கு ஊறு விளைவிக்கதான் இவ்வாறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என்று கூறி உள்ளார்.

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக நீண்ட விளக்கமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அக்பர் பகிர்ந்துள்ளார்.
அதில் என் மீது இப்போது குற்றஞ்சாட்டி உள்ள ரமணி சென்ற ஆண்டு எழுதிய கட்டுரையில் என் பெயரை குறிப்பிடவில்லை. ஏன் குறிப்பிடவில்லை என அப்போது கேட்கப்பட்டதற்கு, ட்விட்டரில், "அவர் எதுவும் செய்யவில்லை. அதனால் குறிப்பிடவில்லை" என்று பதில் அளித்து இருந்தார். நான் எதுவும் செய்யவில்லை என்றால், என்ன கதை இது? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அது போல இன்னொரு ஊடகவியலாளரான கஜாலா வஹாபின் குற்றச்சாட்டிற்கும் விளக்கம் அளித்துள்ளார்.

தொடரும் குற்றச்சாட்டுகள்
நகைச்சுவை நடிகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் என பல பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில் இப்போது அக்பரும் இணைந்துள்ளார்.
தி ஏசியன் ஏஜ் மற்றும் தி டெலிகிராஃப் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராக அக்பர் இருந்திருக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இதழாளராக அவர் கருதப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சில மாதங்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியூயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
அது குறித்து அந்த சமயத்தில் ஓர் இதழில் ப்ரியா ரமணி கட்டுரை எழுதி இருந்தார்.
அந்த கட்டுரையை மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்த ரமணி, அந்த பதிவில் அக்பர் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐந்து பெண்கள் அக்பரால் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












