நாளிதழ்களில் இன்று: இறந்த பின்னும் நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கருணாநிதி

இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.

இந்து தமிழ் - கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தவருக்கும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. மறைந்தவர் உறுப்பினராக இருந்த அவை மட்டுமே ஒத்திவைக்கப்படுவது வழக்கம்.

Presentational grey line

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மெரினாவில் இடம் மறுப்பு

மெரினா

பட மூலாதாரம், SUDHARSHAN PATNAYAK

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் மறுக்கப்பட்டது குறுகலான நோக்குடைய, மட்டமான அரசியல் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

தன் சாதனைகள், நிர்வாகத் திறன் மற்றும் நுண்ணறிவு ஆகியவற்றுக்காக கருணாநிதி, அரசியல் வேறுபாடுகள் கடந்து மதிக்கப்படுபவர் என்றும், இறந்தவரின் உடல் மீது அதிகாரச் சண்டையிட்டதன்மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் தங்களது நிலையை மேம்படுத்திக்கொள்ளவில்லை என்றும் அந்தத் தலையங்கம் விமர்சிக்கிறது.

Presentational grey line

தி இந்து (ஆங்கிலம்) - திருமணத்துக்கு வெளியே உறவு

திருமணம்

பட மூலாதாரம், Getty Images

திருமணத்துக்கு வெளியே உறவு கொள்ளும் நபரை ஐந்து ஆண்டுகள் சிறைக்கு அனுப்புவது அடிப்படை அறிவுக்கு பொருத்தமற்றது என்று இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

திருமணத்தின் புனிதத் தன்மையைக் காக்கவும், பொது நலன் கருதியும் திருமணதுக்கு வெளியே வேறொரு நபருடன் உறவுகொள்வதை இந்திய தண்டனை சட்டத்தில் உள்ளபடி தொடர்ந்து குற்றமாக நீடிக்க வேண்டும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவுக்கு தீபக் மிஸ்ரா இவாறு கூறியுள்ளது.

திருமணமான பெண் ஒருவருடன் வேறொரு ஆண் உறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 497ஐ, பாரபட்சமாக உள்ளதால் ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

Presentational grey line

தினமணி - மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்

மாநிலங்களவை

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற மாநிலங்கள் அவையின் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இத்தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஹரிவன்ஷ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசின் பி.கே.ஹரிபிரசாத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :