உலகப்பார்வை: பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி

கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம்.

துப்பாக்கிச் சூடு நடத்த சிறார்களுக்கு பயிற்சி

US

பட மூலாதாரம், AFP

அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில், பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒரு தனி வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 11 சிறார்களும் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி தாக்குதல் நடத்த பயிற்றுவிக்கப்பட்டதாக, அவர்களை அடைத்து வைத்ததற்காக கைது செய்யப்பட்ட இரு நபர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அந்த சிறார்கள் அனைவரும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் மெலிந்த நிலையில் இருந்தனர்.

அந்த சிறார்களின் தாய்கள் என்று கருதப்படும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Presentational grey line

'பிராஞ்சலினா' மோதல்

Angelina Jolie

பட மூலாதாரம், Reuters

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 2016இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தபின், குழந்தைகளை பராமரிப்பதற்காக எவ்வகையிலும் உதவவில்லை என்று ஜோலியின் வழக்கறிஞர் கூறியதற்கு, அவரது கணவர் நடிகர் பிராட் பிட் தரப்பு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஜோலிக்கு, பிட் 1.3 பில்லியன் டாலர் பணமும், வீடு வாங்க எட்டு மில்லியன் டாலர் கடனும் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2005 முதல் ஒன்றாக வாழ்ந்து வந்த அவர்கள் 2014இல் திருமணம் செய்து கொண்டனர்.

Presentational grey line

ரஷ்யா மீது அமெரிக்கா தடை

Sergei and Yulia Skripal

பட மூலாதாரம், REX FEATURES

பிரிட்டனில் உள்ள முன்னாள் ரஷ்ய உளவாளி மீது நரம்பு மண்டலத்தை பாதிக்கும் பொருளால் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தீர்மானிக்கப்பட்டபிறகு ரஷ்யா மீது தாங்கள் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவாளியான செர்கி ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் யூலியாவும் கடந்த மார்ச் மாதத்தில் சாலிஸ்பர்ரி நகரில் நினைவிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இந்த தாக்குதலால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இருவரும் பல வாரங்கள் நடந்த மருத்துவமனை சிகிச்சைக்குப்பின் மீண்டனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணமென்று ஒரு பிரிட்டன் புலனாய்வு அமைப்பு சாட்டியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடுமையாக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

Presentational grey line

அமெரிக்க தேர்தலில் அதிக அளவு பெண்கள்

US

அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் மாகாண ஆளுநர் பதவிகளுக்கு நடந்த இடைத் தேர்தல்களில், இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு பெண்கள் போட்டியிட்டுள்ளனர்.

நான்கு மாகாணங்களில் நடந்த முதல் கட்ட தேர்தல்களில் ஆளுநர் பதவிக்கு போட்டியிட 11 பெண்களும், பிரதிநிகள் சபைக்கு போட்டியிட 185 பெண்களும் தேர்வாகியுள்ளனர்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :