ரகசியமாக குழந்தை பெற்று விமானக் கழிவறையில் விட்டுச் சென்ற தாய்
அசாம் மாநிலத் தலைநகர் கௌஹாத்தியில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில் பிறந்து, இறந்த குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்ட பின்னர், தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
வியாழக்கிழமை விமானம் தரையிறங்க சில நிமிடங்கள் இருந்த நிலையில் இந்த குழந்தையின் சடலத்தை ஏர் ஏசியா விமானப் பணியாளர்கள் கண்டுபிடித்தனர். அதன் பிறகு விமானத்தில் பயணம் செய்த எல்லா பெண்களையும் பணியாளர்கள் விசாரித்தனர். அப்போது 19 வயது பெண் ஒருவர் விமானத்தின் கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
தான் கருத்தரித்து இருந்தது தனக்கு தெரியாது என்று இந்த பெண் தெரிவித்ததாக போலீஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
வழக்குப் பதிவு செய்து, இது தொடர்பாக விசாரித்து வருவதாக விமான நிலைய போலீஸ் மேலும் கூறியுள்ளது.
அந்தக் குழந்தை குறைப்பிரசவமாக ஏழரை மாதத்தில் பிறந்ததாக, சஞ்சய் பாட்டியா பிபிசியிடம் கூறியுள்ளார்.
இந்த குழந்தை இறந்தது எப்படி என்று கண்டறிய உடற்கூறு ஆய்வு முடிவுகளுக்காக காவல்துறை காத்திருப்பதாகவும், அது கிடைத்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,
டேக்வாண்டோ விளையாட்டு வீராங்கனையான இந்த பெண், அடுத்து செல்ல இருந்த தென் கொரிய விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
இதனால், விமான பயணத்திட்டத்தில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் பயணிகளிடம் ஏர் ஏசியா விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
விசாரணைக்கு உதவுவோம் என்றும், இது தொடர்பான எல்லா நிறுவனங்களோடும் ஒத்துழைப்போம் என்றும் ஏர் ஏசியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமிலுள்ள இந்த பெண்ணின் குடும்பத்தினரோடு தொடர்பு கொள்ள போலீஸ் முயன்று வருகிறது.
"சலவை எந்திரம்" போன்று குலுங்கிய ஏர் ஏசியா விமானம்
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













