கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் புதிய படம்: சுவாரஸ்ய தகவல்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கும் புது படத்தின் சூட்டிங் டார்ஜீலிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை தற்போது படமாக்கி வருகின்றனர். அந்த படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்கள் இதோ…
- ரஜினிகாந்த் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடிக்கிறார்.
- கதைக்களம் ஊட்டியில் நடைபெறுவதாக காட்சிகள் எடுக்கப்படுகின்றன. அதை ஊட்டியில் எடுத்தால் சூட்டிங்கை காணவரும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும் என்பதால் டார்ஜீலிங் பகுதியில் படமாக்குகின்றனர்.
- ரஜினிகாந்திற்கு கேரவன் கிடையாது. கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெறுவதால், அங்கு இருக்கும் ஒரு ஊழியரின் அறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- டார்ஜீலிங் பகுதியில் அடிக்கடி மழை பெய்வதால் சூட்டிங் சில மணி நேரம் தடைபடுகிறது.
- சூட்டிங் மழையால் தடைபடுவதால் சில நாட்கள், அடுத்த நாள் காலை 6 மணி வரை சூட்டிங் தொடர்கிறது. அதன் பின் சில மணி நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் சூட்டிங்கை தொடங்குகின்றனர்.
- இரவு 3 மணிக்கு ஷாட் என்றாலும் 2.45 மணிக்கெள்ளாம் ரஜினிகாந்த் ஷாட்டுக்கு ரெடியாக இருப்பார்.
- இந்த படத்தில் 200 கல்லூரி மாணவர்களுடன் நடிப்பதால் ரசித்து ரசித்து அவர் நடித்து வருகிறார்.
- சின்ன சின்ன அரசியல் வசனங்கள் இருந்தாலும், ஆனால் இது அரசியல் படம் கிடையாது. பக்காவான கமர்ஷியல் படமாக உருவாகிறது
- கபாலி, காலா போல 50 வயதுக்கு மேற்பட்டவராக ரஜினிகாந்த் நடிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








