You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"கூடங்குளம் மின்சாரத்தை பகிர்ந்துகொள்வோர் அணுக் கழிவையும் பகிர்ந்துகொள்ளட்டும்''
கூடங்குளம் அணுக் கழிவு சேமிப்புத் தளத்தை உருவாக்க 2022 வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம். இது தொடர்பாக வாதம் விவாதம் பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகள் வீரியத்தோடு இருக்கும் அணுக் கழிவுகளை கையாளும் விஷயத்தில் மத்திய அரசின் அக்கறை போதுமானதா? என்று கேட்டிருந்தோம்.
அதற்கு பிபிசி நேயர்கள் தெரிவித்த கருத்துகளை இங்கே தொகுத்துள்ளோம்.
"இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையில் ஒரு மெத்தனப்போக்கு தெரிகிறது. அணுக்கழிவுகளை எங்கு பாதுகாக்கப்போகிறது என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.அணுஉலையை அமைத்து அதிகபட்ச ஆபத்தை தமிழகம் எடுத்துக்கொண்டு இருக்கிறது எனவே அணுக்கழிவுகளை தமிழகத்தில் வைக்கக்கூடாது.அப்படி வைப்பதாக இருந்தால் மின்சாரத்தில் பங்கு கேட்கும் மாநிலங்களுக்கு அவர்களுக்குரிய அணுகழிவுளை சரிசமமாக பிரித்துக்கொடுக்க வேண்டும். உற்பத்தியாகும் மின்சாரம்,வேலைவாய்ப்புகளை பெற துடிக்கும் மின்சார பங்குதாரர்கள் தங்கள் மாநிலத்தில் அணுகழிவுகளை பாதுகாக்க இடம் தர வேண்டும்" என்று கருத்து தெரிவித்துள்ளார் நெல்லை டி முத்துசெல்வன்.
சரோஜா பாலசுப்பிரமணியன் : "மக்களின் உயிர்களைப் பற்றி நம் நாடு என்று கவலை பட்டிருக்கிறது? எதிலும் அலட்சியம், ஊழல். உயிரைக்காக்க போராடினால் மக்களை தேச துரோகி என்பார்கள். இதுதான் இன்றைய எதார்த்தம்."
தமிழக மக்கள் மீது அக்கறையே இல்லை மத்திய அரசுக்கு என்கிறார் கண்ணன் தம்ராஜ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்