நாளிதழ்களில் இன்று: "இடைத்தேர்தலுக்கு வாய்ப்பேயில்லை" - எடப்பாடி பழனிசாமி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், DIPR

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அதிமுகவிற்கு திரும்ப வந்தால் அது பாராட்டிற்குரியது என்றும், ஆனால் அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவது என்பதெல்லாம் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி

பிரகாஷ் ஜவடேகர்

பட மூலாதாரம், Getty Images

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் நடத்த வேண்டுமென்று சிபிஎஸ்இ-க்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்தி, சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுந்தான் இத்தேர்வை எழுத முடியுமென்றும் தமிழ் உள்பட 17 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது என்று சிபிஎஸ்இ அறிவித்ததிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி இந்து (தமிழ்)

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

விதிமுறைகளுக்கு புறம்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை மெரினா கடற்கரையில் அமைக்கக்கூடாது என்பதை தனிப்பட்ட கருத்தாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு அரசு சார்பில் நினைவிடம் கட்டக்கூடாது எனக் கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, "கடற்கரை ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளுக்கு புறம் பாக மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் உட்பட எந்தவொரு கட்டிடமும் கட்டக் கூடாது என்பதுதான் எனது தனிப்பட்ட விருப்பம்" என்று தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :