பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள்
தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு.
வெளியானது காலா

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம், உலகெங்கும் வெளியானது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது.

காலா படத்தை லைவ் செய்தவர் கைது

பட மூலாதாரம், TWITTER
பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவிதுள்ளார்.இந்தியாவில் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள காலா திரைப்படம், நேற்று இரவு பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நீட் தேர்வில் தோல்வி: மேலும் ஒரு மாணவி தற்கொலை

பட மூலாதாரம், SUDOK1
நீட் தேர்வில் தோல்வியடைந்த சோகத்தில் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு நீட் தேர்வின் தோல்வி காரணமாக மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட நிலையில், திருச்சியை சேர்ந்த சுபஸ்ரீ நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்பெயின் அமைச்சரவையில் பெண்களுக்கு கூடுதல் இடம்

பட மூலாதாரம், EPA
ஸ்பெயின் நாட்டின் புதிய பிரதமரான சோஷியலிச கட்சியின் பெட்ரோ சன்செத் அறிவித்துள்ள 17 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். பெண் அமைச்சர்கள் அதிகம் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது ஐரோப்பாவின் பிற நாடுகளை காட்டிலும் இங்குதான்.

'மன அழுத்தம் இருந்தது உண்மைதான்': ஒப்புக்கொண்ட கால்பந்து வீரர்

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து கால்பந்து அணியின் தடுப்பாட்டக்காரரான டேனி ரோஸ் தனக்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை இருந்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.
காயம் மற்றும் தனது குடும்பத்தில் நடந்த சில சோகமான நிகழ்வுகளால் மன அழுத்தம் ஏற்பட்டதாக அவர் அளித்த வெளிப்படையான பேட்டி அந்நாட்டில் பல செய்தித்தாள்களில் வெளிவந்துள்ளது.













