கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் போலீஸ்

பெண் போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்தது.

கர்நாடகாவில் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து, அக்குழந்தையைக் காப்பாற்றிய ஒரு பெண் போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

''குழந்தையை பார்த்த பிறகு என்னால் தாங்கமுடியவில்லை. என் குழந்தை அழுவதைப் போல் உணர்ந்தேன். அக்குழந்தைக்கு உணவளித்தேன்'' என்கிறார் அந்த பெண் போலீஸ்.

பெங்களுரூவில் ஒரு கட்டுமான தளத்தின் அருகே, இக்குழந்தையைப் பார்த்த ஒரு உள்ளூர் கடைக்காரர் தங்களுக்குத் தகவல் அளித்ததாக அதிகாரிகள் கூறினர்.

இக்குழந்தையை ' அரசு குழந்தை' என உள்ளூர் மக்கள் கூறினர்.

தான் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றேடுத்ததாகவும், கைவிடப்பட்ட குழந்தையை முதல் முறை பார்த்தவுடனே நெருக்கமாக உணந்ததாகவும் பிபிசியிடம் கூறினார் அர்ச்சனா என்னும் அந்த பெண் போலீஸ். இவரின் உடனடி நடவடிக்கையை சக போலீஸார் பாராட்டினார். அர்ச்சனாவின் செயல், ஒருவேளைக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

கர்நாடகாவின் புதிய முதல்வராக குமாரசுவாமி மே மாதம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த பச்சிளம் குழந்தைக்கு ''குட்டி குமாரசுவாமி'' என உள்ளூர் மக்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

குழந்தை மோசமான நிலையில் இருப்பதை அறிந்தபிறகு, குழந்தையை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக போலீஸ் அதிகாரி நாகேஷ் கூறினார்.

இக்குழந்தையைக் குழந்தைகள் காப்பகத்தில் போலீஸார் ஒப்படைத்தனர். குழந்தையைக் கைவிட்டதற்காக விவரம் தெரியாத நபர்கள் மீது புகாரும் பதியப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: