வாதம் விவாதம்: ''நீட் தேர்வு வேண்டாம் என்று தொடர்ந்து போராடுவோம்''

பட மூலாதாரம், Getty Images
நீட் தேர்வே வேண்டாம் என்ற கோரிக்கை இனி என்னவாகும்? என்று வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
இதற்கு பிபிசி தமிழின் நேயர் தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வழங்குகின்றோம்.
சரோஜா சுப்பிரமணியன் என்கிற நேயர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், ''இனி வரும் காலத்தில், தமிழகத்திலேயே தேர்வு மையங்களை போட்டால் போதும் என்று சமாதானம் அடைவார்கள், நீட் வேண்டாம் என்பதை விட்டுவிடுவார்கள். பெரிய கோட்டை மேலே போட்டு நீட் பிரச்சனையை சின்ன கோடாய் மாற்றிவிட்டார்கள்.''

பட மூலாதாரம், Twitter
வெங்கட் என்பவர்.'' தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று போராடுவோம்'' என்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஜீசஸ் நெப்போலியன் என்கிற நேயர், ''நீட் நிறுத்தப்படும். சிபிஎஸ்இ அம்பலத்திற்கு வரப்போகிறது. காத்திருங்கள்'' என்று எழுதியுள்ளார்.

''தொடந்து போராட்டம் தமிழகம் முழுவதும் ஏற்பட வேண்டும்.மெரினா புரட்சி`` என்பது சாம் சாமின் கருத்தாகும்.
பாலாஜி என்பவர், ''நீட் மருத்துவ நுழைவுத் தேர்வே வேண்டாம் என்பது சரியல்ல. எனினும் அதில் சில வழிமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும்'' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

பட மூலாதாரம், Twitter
''அனைவரும் ஒன்று சேர்ந்து பின்வாங்காமல் மத்திய அரசுக்கு எதிராக ஒத்துழையா போராட்டம் செய்ய வேண்டும்'' என்று ராமகுமார் கூறியுள்ளார்,

பட மூலாதாரம், Twitter
அக்பர் அலி என்பவர், ''இனி நல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் உருவாவதை பொருத்த விசயம் அது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Twitter
''தொடர்ந்து நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்த்து போராடுவோம் எதிர்ப்போம்'' என்று கனி வெங்கடேசன் குறிப்பிடுகிறார்,

பட மூலாதாரம், Twitter
''இன்னும் தீவிரமாக எதிர்க்க வேண்டும்'' என்பது அப்துல் ஹமீதின் கருத்தாகும்.

பட மூலாதாரம், Twitter
பிற செய்திகள்:
- வடமாநில நீட் தேர்வு மையங்கள் தமிழக மாணவர்களே தேர்தெடுத்தவை - சிபிஎஸ்இ தகவல்
- கார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்? #KarlMarx200
- செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா'
- நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா-வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம்
- டீக்கடை நடத்திக் கொண்டு தடகளத்தில் சாதிக்கும் 'பதக்க மங்கை'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












